புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 27, 2024)

பரலோக பொக்கிஷங்களையே நாடுங்கள்

மத்தேயு 6:19

பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்;


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த ஆண்டு வந்த ராஜாவானவன், பல ஆண்டுகளாக நல்ல ஆட்சி ஆண்டு வந்தான். அவனுடைய குமாரனானவன் வளர்ந்து வாலிப வயத்தை அடைந்த பின்னர், ஒரு வகையான போதைவஸ்துக்கு அடிமையாகிவிட்டான். ராஜாவானவன், பல வழிகளால் அவனைக் குணப்படுத்த முயற்சி செய்தபோதும், குமாரனானவனை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை யாக முடியாமற்போய்விட்டது. தன் குமாரனானவன், சட்டத்தின் முன் குற்றவாளியாக காணப்படாதபடிக்கு என்ன செய்யலாம் என தன் மந்திரியிடம் ஆலோசனை கேட்டான். அதற்கு மந்திரியானவன், ராஜாவை நோக்கி: ராஜவே, இந்த ராஜ்யத்தின் எல்லையெங்கும் அந்தப் போதைப் பொருள் தடை செய்யப்பட்டிருக்கின்றது. அதனால் பலர் குற்றவாளிக ளாக சிறையிலே இருக்கின்றார்கள். பல பெற்றோர் தங்கள் பிள்ளை களைக் குறித்து வேதனையோடு இருக்கின்றார்கள். அந்தப் போதைப்பொருளை உம்முடைய ராஜ்யத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட விற்ப னைப் பொருளாக்க சட்டத்தை பிறப்பித்து விடும். நாட்டிற்கும் வருமானம் அதிகரிக்கும், மக்களும் சந்தோஷமாயிருப்பார்கள், உம்முடைய குமாரனும் நிரபராதியாகி விடுவான் என்றான். அன்றுவரைக்கும் நீதி யாக ஆட்சி செய்து வந்த அந்த ராஜாவிற்கு வழியேதும் தெரியாததால், மந்திரியின் துர்ஆலோசனையை கேட்டு, அந்தப் போதைப் பொருளின் தடையை நீக்கி, விற் பனைப் பொருளாக மாற்றும்படி புதிய சட்டத்தை பிறப்பித்தான். நிலையான பரம தேசத்தில் பொக்கிஷங்களை சேர்க்க அழைக்ப்பட்ட சகோதர சகோதரிகளே, ஆண்டவராகிய இயேசு பொருள் ஆசை, பண ஆசை என்று கூறாமல், பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம். பரலோகத்திலே உங்களுக்காக பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள் என்று கூறினார். ஆனால் இன்று பணத்தையும் பொருளையும் விரும்பும் சில கள்ளப் போதகர்கள், தங்களுக்குண்டான பணம் பொருள் தேவனால் உண் டான ஆசீர்வாதம் என்று உபதேசங்களை மாற்றி, தேவ பிள்ளைகள் விசுவாசிகளாக வாழும்படிக்கு கற்றுக் கொடுக்காமல், உலக பொரு ளுக்காக தேவனை தேடும்படிக்கு தவறாக உபதேசம் செய்கின்றார்கள். போதைப்பொருளை சட்டமாக்கிய ராஜாவைப் போல, இவர்கள், தேவன் விலக்கியதை, தேவனுடையது என்று போதித்து உலகப் பொரு ளையும், தேவனையும் இணைத்து பேசுகின்றார்கள். இழுப்புண்டு போய்விடாதிருங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, இந்தப் பூமிக்குரி யவைகளையல்ல, மேலானவைகளை நாடித்தேடும்படிக்கு, இந்தப் பூமிக்குரியவைகளை எவ்வளவு அற்பமானவைகள் என்று உணர்ந்து கொள்ளும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 கொரி 15:19