புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 26, 2024)

தேவனுக்குரிய மகிமை...

சங்கீதம் 29:2

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;


புதிய ஏற்பாட்டின் காலத்திலே, பிரதியட்சமாக நிறைவேறிய, தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள கூடியவைகளையும் தியானத்திற்கெடுத்துக் கொள்வோம். ஆதி அப்போஸ்தலரின் நாட்களிலே, எரோதுராஜா சபையிலே சிலரை துன்பப்படுத்த தொடங்கி, யோவானுடைய சகோதரனாகிய யா க்கோபை பட்டயத்தினாலே கொலை செய்தான். அது அன்றைய யூதமார் கத்தாருக்கு பிரியமாயிருந்ததால், பேதுருவையும் பிடித்து கடுங் காவ லிலே வைத்தான். அவன் பேதுரு வை வெளியே கொண்டுவர முன் குறி த்த நாளுக்கு, முதல் நாளிலே, அற் புதவிதமாக, கர்த்தருடைய தூதன் பேதுருவை சிறைச்சாலைக்கு வெளியே கொண்டு வந்து விட்டான். குறித்த நாளிலே: ஏரோது ராஜ வஸ்திரம் தரித்துக் கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, தீரு சீதோன் பட்டணத்தாருக்கு பிரசங்கம் பண் ணினான். அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவ சத்தம் என்று ஆர்ப்பரித் தார்கள். அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுபுழுத்து இறந்தான். ராஜாவனவன், நீதியையும் நியாயத்தையும் நடத்த நியமி க்கப்பட்டவன். ஆனால், ஏரோது ராஜாவோ, ஜனங்களை பிரியப்படு த்தும்படிக்கு அநீதியையும், அநியாயத்தையும் நடத்துகின்றவனாக இரு ந்தான். இன்று தேவ சபைகளிலே கூட, சிலர் ஜனங்களை தக்க வைப் பதற்காக தேவ நீதியை நிறைவேற்றாமல், அநியாயங்களை சகித்து கொள்ள ஆயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். அது தேவ பிள்ளை களுக்குரிய தெய்வீக சுபாவம் அல்ல. ராஜ்யமும், வல்லமையும், மகி மையும் கர்த்தருடையவைகள். பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமைiயும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதை செலத்துங்கள், கர்த்தருடைய நாமத்துக்குரிய மகிமையை அவருக்கு செலுத்துங்கள் என்று தேவ பக்தன் பாடியிருப்பதை பரிசுத்த வேதாக மத்திலே காணலாம். ஆனால், இன்று தேவனுடையவர்கள் என்று கூறும் சிலர், தேவனுக்குரிய மகிமையை செலுத்தாமல், ஜனங்களை கவர்ந்து கொள்வதற்காக, மகிமையை தங்களுடையதாக்கிக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, காலம் தாமதித்தாலும், கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு உண்டு. ஞானமுள்ளவர்களோ, கிருபையின் காலத்திலே, மனந்திரும்பி தேவனுடைய பாதத்திலே தங்களை ஒப்புக் கொடுப்பார்கள்.

ஜெபம்:

மகிமை நிறைந்த தேவனே, நியாயத்தீர்ப்பைக் குறித்து அசட்டை செய்து, நீதியையும் நியாயத்தையும் நிறைவேற்றாமல் வாழாதபடிக்கு, உமக்கு பயப்பிடுகின்ற பயம் என்னில் எப்போதும் இருப்பதாக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:16