புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 23, 2024)

பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்

1 தெசலோனிக்கேயர் 4:8

ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான்.


அது பழைய ஏற்பாட்டின் காலம், அதிலே நியாத்தீர்ப்பு உண்டாயிருந்தது. இது புதிய ஏற்பாட்டின் காலம் இது கிருபையின் காலம் என்று பொதுவாக விசுவாச மார்க்கத்தார் சொல்லிக் கொள்வதுண்டு. அதில் உண்மை உண்டு. ஆனால், சத்தியத்தை சுத்மாக பேசும் ஊழியர்கள், சிலரின் தவறான வழிகளை சுட்டிக் காட்டும் போது, அவ ர்கள் தங்கள் தவறான வழிகளை விட்டு விலக மனதில்லாதவர்களாய், உலகத்தை சபைக்கும் கொண்டுவரும்படிக்கு, தங்கள் வழிகளை நியா யப்படுத்தும்படிக்கு, அப்படிப்பட்ட ஊழியர்களை நோக்கி: 'நீங்கள் நியாயப்பிரமாண போதகர்கள், இது புதிய ஏற்பாட்டின் காலம். தேவ கிருபையை பற்றி உங்களுக்கு அறி வில்லை' என்று சந்தர்பத்திற்கு தப் பிக் கொள்ளும்படி கூறிக் கொள் வார்கள். புதிய ஏற்பாட்டின் ஆரம்ப நாட்களிலே, அனனியா என்னும் விசுவாசியும், அவன் மனைவியாகிய சப்பீராள் என்பவளும், ஒருமனப்பட்டு, திட்டமிட்டு, பரிசுத்த ஆவியானவருக்கு பொய் சொல்லும்படிக்கு சாத்தானுக்கு தங்கள் இருதயத்திலே இடம் கொடுத்தார்கள். அந்த இடமானது பொருளாசையினாலே உண்டாயிற்று. அவர்கள் அந்த இட த்திலேயே விழுந்து மரித்துப் போனார்கள். இவர்களின் செய்கைகளின் தார்பரியத்தைக் குறித்து நாளையே தியானத்திலே நாம் ஆராய்ந்து பார்க்காலம். ஆனால், இன்றைய நாளிலே, தேவனுடைய பரிசுத்தம் அன்றும் இன்றும் என்றும் மாறாதது என்பதை நீங்கள் திட்டமாக அறிந்து கொள்ள வேண்டும். ஆதி அப்போஸ்தல சபையிலே அனனியா சப்பீராளுக்கு நடந்தது போல இன்றும் நடக்குமாக இருந்தால், சபையிலே யார் தப்பித்துக் கொள்வார்கள்? தேவனுடைய பரிசுத்தம் மாறவில்லை. ஆனால், நாம் நிர்மூலமாகாதிருப்பது தேவனுடைய சுத்த கிருபையாக இருக்கின்றது. அதனால், நாம் துணிகரம் கொண்டு, அது பழைய ஏற்பாடு, இது புதிய ஏற்பாடு என்று மதியீனர்களைப் போல பேசாமலும், தேவனுடைய நீடிய பொறுமையை அசட்டை செய்யாமலும், தாழ்மையுள்ள உள்ளத்தோடு, சத்தியத்திற்கு கீழ்படிந்து, உங் களுக்கு கொடுக்கப்பட்ட நாட்களை குணப்படும்படி பிரயோஜனப் படுத்திக் கொள்ளுங்கள். தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

ஜெபம்:

நேற்றும் இன்றும் என்றும் மாறாத பரிசுத்தமுள்ள தேவனே, உம்முடைய நீடிய பொறுமையை நான் அசட்டை செய்து துணிகரமான பேச்சுகளை பேசாமல், மனத்தாழ்மையோடு மனந்திரும்பும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மல்கியா 3:6