தியானம் (ஐப்பசி 22, 2024)
அறிக்கையும் கிரியையும்
தீத்து 1:16
அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்;
ஆதி அப்போஸ்தலர்களுடைய நாட்களிலே, அவர்கள் மிகுந்த பலத்துடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை குறித்து சாட்சி கொடுத்து வந்தார்கள். அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. அந்நாட்களிலே ஏற்பட்ட குறைவுகளை நிறைவு படுத்தும்படிக்கு, நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப் கட்டவைகளின் கிரயத்தைக் கொண்டு வந்து அப்போஸ்தலரின் பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்னுத் தேவை யானதற்குத் தக்கதாய் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவில்லாதிருந்தது. அப்போஸ்தலரினாலே ஆறு தலின் மகன் என்று அர்தங்கொள்ளும் பர்னபா மறுபேர் பெற்றவனுமாகிய யோசே என்பவனும், தனக்குண்டாயிருந்த நிலத்தை விற்று, அதின் கிரயத்தை கொண்டு வந்து அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். ஆதிச் திருச்சபையிலே யாவும் ஒழுங்கும் கிரமமுமாக நட ந்து வந்தது. யாவரும் இசைந்த ஆத்துமாக்களாக, ஒருமைபா ட்டுடன் செயற்பட்டு வந்தார்கள். அந்தச் சபையிலே அனனியா என்னும் பேருள்ள ஒருவனும் அவன் மனைவியாகிய சப்பீராளும், மற்றய விசுவாசிகள் செய்தது போல, தாங்களும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். மற்றவர்கள் செய்த பிரகாரமாகவே கிரயத்தை கொண்டு வந்து அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். ஆனாலும், ஒரு பங்கை தங்களுக்கென்று வஞ்சித்து வைத்தார்கள். அதாவது, சபையிலே விசுவாசியாக இருக்க வேண்டும். மற்றவர்கள் தாங்களாக முன்வந்து செய்யும் நற்கிரியைகளை, தங்களுக்கு பெயருண்டாக்க செய்யவும் வேண்டும். ஆனாலும், மற்றவர்கள் போல, மனப்பூர்மாக செய்யவோ மனதில்லை. கணவன் மனைவியாக திட்டமிட்டு, பரிசுத்த ஆவியானவருக்கு பொய் சொல்ல துணிகரமுள்ள இருதயமுள்ளவர்களாக இருந்தார்கள். அதனால், அவர்கள் இருவரும், தேவ ஊழியராகிய பேதுரு அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது விழுந்து ஜீவனை விட்டார்கள். பிரிய மானவர்களேநீங்களோ, மற்றவர்கள் செய்கின்றார்கள் எனவே நானும் செய்ய வேண்டும் என்று நற்கிரியைகளை செய்யாமலும், உலகப் பொரு ட்களுக்கும் தேவனுக்கும் ஊழியம் செய்யலாம் என்ற மனதையுடைய வர்ளாக இல்லாமலும், உண்மை மனதோடு தேவனை சேவியுங்கள்.
ஜெபம்:
சுயாதீனத்தை எனக்கு தந்த தேவனே, நீர் தந்த சுயாதீனத்தை, தவறாக பயன்படுத்தி, உலக ஆசைகளை மனதிலே ஒளித்து வைப்பதற் கேதுவாய் எண்ணம் கொள்ளாதிருக்க எனக்கு உணர்வுள்ள இருதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 2:16