புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 21, 2024)

தேவபக்தியின் வேஷம் தரித்தவர்கள்

2 தீமோத்தேயு 3:5

தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.


ஒரு ஊரிலே இயங்கி வந்த சனசமூக நிலையத்தினால், சில தொண் டர்கள் ஒன்றுகூடி, வருடந்தோறும், ஏழை எளியவர்களுக்கு உதவும் படிக்கு, நிதி சேகரிப்பதற்காக நிகழ்சியொன்றை நடத்தி வந்தார்கள். அந்த ஊரிலுள்ள வியாபாரியொருவன், அந்தத் திட்டத்திற்கு உதவு வதற்கு மனதில்லாதிருந்த போதும், அந்த நிகழ்ச்சிக்கு சென்று, தான் ஆதரவு வழங்குவதைப்போல தன் னை காட்டிக் கொண்டான். அவ னு டைய நண்பனானவன், அவனை நோக்கி: உனக்கு இந்தத் திட்டம் பிடிக்கவில்லை என்றால், பின்னர் ஏன் அதற்கு ஆதவரவு வழங்குவ தைப் போல பாசாங்கு செய்கின் றாய். அந்தத் திட்டத்திலே பங்கு பற்ற வேண்டும் என்று யாரும், எவரையும் கட்டாயப்படுத்துவதில்லையே என்று கூறினான். அதற்கு அந்த வியாபரியானவன்: ஊர் மக்களில் அதிக படியானோர், அப்படிப் பட்ட திட்டங்களை விரும்புகின்றார்கள். நான் அங்கு செல்லாவிட்டால், ஊர் மக்கள் மத்தியிலே என் செல்வாக்கு குறைந்து விடும். அது என் வியாபாரத்திற்கும் கூடாது. எனவே நான் அங்கு சென்று சிறிய முத லீட்டை செய்தேன் என்றான். பாருங்கள், அந்த மனிதனாவன், அந்தக் நற்கிரியையின் கருப்பொருளையும், அதன் மேன்மையையும் குறித்து எண்ணமற்றவனாக வாழ்ந்து வந்த போதும், சுய இலாபம் கருதி, ஊரார் மத்தியிலே தன் பெயர் மேன்மைபட வேண்டும் என்ற காரணத்தினால் அரை மனதுடன் அந்தத் திட்டத்திலே பங்கேற்பவன் போல பாசாங்கு செய்து கொண்டான். அவ்வண்ணமாகவே இன்று சில மனிதர்கள் கிறி ஸ்தவர்கள் என்ற பெயரை தரித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக் கத்துடன் தேவ ஆலயதிற்கும் சென்று வருகின்றார்கள். ஆனால், இவர்ளோ கிறிஸ்துவைப் போல வாழ வேண்டுமென்றும் மனதில்லாதவர்க ளாகவே இருக்கின்றார்கள். நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையற்றவர்கள். ஊரிலே மனிதர்கள் மத்தியிலே தாங்களும் தேவ பக்தியுள்ளவர்கள் என்று காண்பிக்கும்படிக்கு தங்கள் செல்வம் தேவ பக்தியினால் உண்டானது என்று கூறி, உலகத்திற்கும் தேவ னுக்கும் ஊழியம் செய்யலாம் என்று முயற்சிக்கின்றார்கள். அவர்கள் தேவன், அவர்களுடைய வயிறு. அவர்களுடைய இருதயம் பொருளா சையால் நிறைந்திருக்கின்றது. இவர்களால் சத்திய மார்க்கம் துஷp க்கப்படுகின்றது. நீங்களோ, இவர்களை விட்டு அகன்று, உண்மையுள்ள மனதோடு தேவனுடைய ராஜ்யத்தை நாடித் தேடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் வேறு காரியங்களை மனதில் கொண்டவனாய், உமது சபையிலே குழப்பம் ஏற்படுத்தாதபடிக்கு, தெளிந்த புத்தியை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - தீத்து 1:16