தியானம் (ஐப்பசி 20, 2024)
கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்
எபிரெயர் 4:16
ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.
பரிசுத்தத்தையும், ஒழுக்கங்களையும் குறித்து பேசும் போது, சிலர் உடனடியாக அது பழைய ஏற்பாடு, இது புதிய ஏற்பாடு என்று தர்க்கம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதே நபர்கள், இரட்சிப்பு தேவனுடைய ஈவு. தேவன் கொடுத்த ஈவை அவர் பறிக்க மாட்டார் என்றும் விதண்டாவதமாக பேசிக் கொள்வார்கள். தகப்பனானவர் தன் பிள்ளைக்கு கொடுத்த ஈவை அவர் மறுபடியும் எடுக்க மாட்டார். ஆனால், தகப்பனானவர் கொடுத்த ஈவின் மேன்மையை அசட்டை செய்து, அதை எறிந்து போடும், கீழ்படியாத பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்று, கடந்து நாட்களிலே நாம் தியானம் செய் தோம். பழைய ஏற்பாட்டின் நாட்களிலே, கிருபாசனம் இருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள், பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். அபாத்திரனாய் பிரவேசிப்பவன் தேவனுடைய பரிசுத்தத்திற்கு முன் நிற்ககூடாதபடிக்கு, உடடினயாக மரித்துப் போய்விடுவான். ஆண்டவராகிய இயேசுதாமே, நாம் யாவரும் கிருபாசனத்தண்டையிலே தைரியமாக சேரும்படிக்கு பெரிதான சிலாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் உண்டு பண்ணினார். அதனால் தேவனுடைய பரிசுத்தம் பழைய ஏற்பாட்டிலிருந்து, புதிய ஏற்பாட்டின் நாட்களிலே குறை வடைந்து போய்விட்டதா? இல்லை, அவர் எப்போதும் ஒருவரும் சேரக் கூடாத ஒளியிலே வாசம் செய்பவர். நாம் அவரிடத்தில் சேரும்படிக்கு, இந்த மகாபெரிதான கிருபையை பொழிந்திருக்கின்றார். நாம் அவருடைய கிருபையினாலே நிர்மூலமாகாதிருக்கின்றோம். நாம் அந்நாட்களிலே வாழ்ந்த ஜனங்களைவிட அதிக பாக்கியம் பெற்றவர்கள். நம் பெலவீனங்களை நேரடியாக கர்த்தரிடம் அறிக்கை செய்து விட்டுவிடும் அருமையான கிருபையை பெற்றவர்கள். அப்படியிருந்தும், ஒருவன், 'சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும் என்று பரிசுத்த வேதாகமம்ம கூறிகின்றது. இதை எபிரெயர் 10ம் அதிகாரம், 26ம், 27ம் வசனங்களிலே வாசித்துப் தியானியங்கள். உங் கள் பெலவீனங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுங்கள்.
ஜெபம்:
ஒருவரும் சேரக்கூடாத ஒளியிலே வாசம் செய்யும் தேவனே, உம்முடைய பரிசுத்தத்தைகயும், உம்முடைய கிருபையைiயும் நான் அசட்டை செய்யாமல் வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 3:7-8