தியானம் (ஐப்பசி 19, 2024)
பெற்ற ஈவுகளை விட்டுவிடுகின்றவர்கள்
2 பேதுரு 3:14
கறையற்றவர்களும் பிழை யில்லாதவர்களுமாய்ச் சமா தானத்தோடே அவர் சந்நிதி யில் காணப்படும்படி ஜாக்கிர தையாயிருங்கள்.
மேற்கத்தேய நாடுகள் ஒன்றிலே, வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தவறான நண்பர்களோடு சேர்ந்து, அவர்கள் வழியிலே நடந்து, தன் வாழ்வை கெடுத்துக் கொண்டான். தங்களுடைய மகனானவன், வாழ்வ டைய வேண்டும் என்று அவனுக்கு தயை செய்து வந்த பெற்றோரும் இந்த உலகத்தை விட்டு கடந்து சென்று விட்டார்கள். அநேக ஆண் டுகளாக அலைந்;திரிந்து, தன்னி டமிருந்த எல்லாவற்றையும் இழ ந்து, இறுதியிலே வீடு வாசல் ஏதும் இல்லாதவனாக தெருவோர மாக பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தான். குளிர்காலம் அண்மித்த போது, அவனுடைய வாழ்க்கை யைக் கண்ட அரச நலன் விரும்பி கள், அவனை தங்களோடு அழை த்து கொண்டு சென்று, அவனுக்கு தங்குவதற்கு இலவசமான விடுதி யொன்றை ஆயத்தப்படுத்தி கொடுத்து, அவன் மாதாந்த செலவிற்கு, பணத்தை கொடுந்து, அவன் புதிய வாழ்வு வாழும்படி அவனுக்கு வேண் டிய வளங்களையும், வசதிகளையும், ஆலோசனைகளையும் அவனுக்கு கொடுத்தார்கள். இவை யாவற்றையும் அவர்கள், அவன் தகுதியின் அடிப்படையிலே அல்ல, அவன்மேல் மனதுருகி, அவனுக்கு இலவச மான ஈவாக கொடுத்திருந்தார்கள். சில மாதங்கள் சென்றபின்பு, வாழ் வின் ஒழுங்கங்களை விரும்பாமல், தனக்கு கிடைக்கும் மாதாந்த உதவி த்தொகையை தவறாமல் பெற்றுக் கொண்டு, மறுபடியும் தெருவுக்கு சென்று, அங்கே, பிச்சையெடுத்து பழைய வாழ்வைப் பின்பற்றி வந்த hன். அந்த அரச நலன் விரும்பிகள், அவனுக்கு ஈவாக கொடுத்தவை கள் யாவையும் அவனிடமிருந்து எடுத்துப் போடவில்லை. எடுத்துப் போடும் எண்ணமும் அவர்களிடம் இருந்ததில்லை. ஆனாலும். அவனோ, ஈவாக பெற்ற நன்மைகளை அசட்டை செய்து, அதனால் உண்டான நன் மைகளை தன் ஆசை இச்சைகளை நிறைவேற்ற பயன்படுத்தி வந்தான். அருமையான சகோதர சகோதரிகளே, நாம் யாவரும் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். அந்த இரட்சிப்பு நம் முடைய தகுதியினாலோ, கிரியைகளினாலே உண்டானதல்ல. அது தேவ னுடைய ஈவு. தேவன் தாம் ஈவாக கொடுத்தவைகளை திரும்ப எடுத்துக் கொள்ளமாட்டார். ஆனால், சில விசுவாசிகளோ, பெற்றுக் கொண்ட ஈவை, அசட்டை செய்து, நிராகரித்து, அவிசுவாசிகளாக மாறி, மேலானவை களை தேடாமல், பூமிக்குரியவைகளுக்கு திரும்பி விடுகின்றார்கள்.
ஜெபம்:
அருமையான இரட்சிப்பை தந்த தேவனேஇ நீர் அருளிய சொல்லி முடியாத ஈவை நான் தள்ளிப்போடாதபடிக்குஇ அந்த ஈவின் மேன் மையை அறிந்துஇ உம்முடைய சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்ற எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:12-13