தியானம் (ஐப்பசி 18, 2024)
பழைய வாழ்வோடு சமரசம் வேண்டாம்
கொலோசெயர் 3:5
ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
நீதியின் மார்க்கத்தை அறிந்து, அதன் வழியிலே வாழ்ந்து, பழைய வாழ்க்கைக்கு திரும்புகின்றவர்களைக் குறித்து கூறும் போது 'அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையைவிட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். (1 பேதுரு 2:21). மனித குலத்திற்கு உண்டான நித்திய கோபாக்கினையிலிருந்து, அவர்கள் விடுதலையாவற்காக, பிதாவாகிய தேவன்தாமே தம்முடைய குமாரனாகிய இயேசு வழியாக ஜீவ னுள்ள புதிய நீதியின் மார்க்கத்தை உண்டு பண்ணினார். மீட்பராகிய இயேசு கிறிஸ்துவினாலேயன்றி மனிதகுலத்திற்கு இரட்சிப்பில்லை. அவருக்கு மேலான நாமம் ஒன்றுமில்லை. அவ ரைவிட்டால், வேறு சத்திய மாரக்கம் இல்லை. அவராலேயன்றி ஒருவனும் பரலோகம் செல்ல முடியாது. ஒருவன் அவரை இன்னும் அறியாதவனாக இருந்தால், அவன் தன் பாவ சாபங்களுக்காக, பரிசுத்தராகிய இயேசு, பரத்திலிருந்து இறங்கி வந்து, இத்தனை பாடுகள்பட்டு, மரிதாரே என்ற அளவற்ற அன்பை அறிந்து கொள்ளும் போது, தன் சாப வாழ்வினின்று இரட்சிப்படைவதற்கு அவனுக்கு ஏதுவுண்டாகும். ஆனால், நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு, அதன் மேன்மையை அசட்டை செய்து, சுத்த மனசாட்சியை கறைப்படுத்தி, விட்டு வந்த இந்த உலக ஆசை இச்சைகளுக்கு மறுபடியும் தன்னை ஒப்புக் கொடுக்கின்றவன், இருதயத்தை கடினப்படுத்திக் கொள்வதால், கர்த்தருடைய கிருபையை உணர்ந்து கொள்வது அவனுக்கு மிகவும் கடினமாக இருக்கும். தேவ கிருபையானது அவர்கள் குணப்படும்படி நீடிய பொறுமையோடு காத்திருக்கின்றபோதும், சுவிசேஷத்தைக் குறித்த அவர்களுடைய எண்ணமா னது சூடுண்டு போனதால், அவர்கள் திரும்ப முடியாதபடிக்கு, தங்கள் வாழ்விலே அநேக முட்டுக்கட்டைகளை உண்டாக்கி, தங்கள் கைகளுக் கும் கால்களுக்கும் தாங்களே விலங்குபோட்டு, இந்த உலகத்தோடு கட்டிக் கொள்கின்றார்கள். அதனால் அவர்கள் மறுபடியும் திரும்ப எத்தனிக்கும் போது, காற்றுக்கு அடிபட்டு அலைகின்ற அலைகளைப்போல, உலக போக்கிற்குள் போக்கும்வரத்துமாக இருப்பார்கள். எனவே, விட்டு வந்த ஆசை இச்சைகள், சொந்த பந்தங்கள், நட்புக்ளு டன் மறுபடியும் சமரசம் செய்வதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்ளாக இருங்கள்.
ஜெபம்:
அன்பின் பரம பிதாவே, உம்மைவிட்டு பிரிந்து போகின்ற கொடுமையான எண்ணத்தை என்னைவிட்டு முற்றிலும் அகற்றிஇ விட்டு வந்தவைகளை மறுபடியும் பற்றிக் கொள்ளாத உணர்வுள்ள இருதயத்தை தந்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 12:43-45