புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 14, 2024)

நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு

வெளிப்படுத்தல் 3:19

நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதை யாயிருந்து, மனந்திரும்பு.


லவோதிக்கேயா என்னும் சபை தன்நிறைவு அடைந்திருந்தால், அந்த சபையோர், தாங்கள் ஐசுவரியவான்களென்றும், திரவியசம்பன்னர்களெ ன்றும், தங்களுக்கு ஒரு குறைவுமில்லையென்றும் எண்ணிக் கொண் டிருந்தார்கள். ஆனால் ஆண்டவராகிய இயேசு அவர்களுடைய நிலை மையைக் குறித்து கூறும் போது, 'நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரித பிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக் கிறதை அறியாமல்' இருக்கின்றாய் என்று கடிந்து கொண்டார். இந்த லவோதிக்கேயா சபையானது ஆவி க்குரிய சபையாக இருந்ததைக் குறி த்து தேவ ஊழியராகிய பவுல், கொலோசேயர் நிரூபத்திலே குறிப் பிட்டிருக்கிறதைக் காணலாம். (கொலோசேயர் 2ம் அதிகாரம்). காலங்கள் கடந்து செல்லும் போது, உலக ஐசுவரியத்தால் அந்த சபையானது நிறைவு கண்டிருந்ததால், அவர்கள் தங்கள் நிலையைக் குறித்து திருப்தியுள்ளவர்களாக இருந்தார் கள். ஆனால், அவர்களோ, குளிருமல்லாமல் அனலுமல்லாமல் வெது வெதுப்பாயிருக்கிறபடியினால், உன்னை என் வாயினின்று வாந்திபண் ணிப்போடுவேன் என்று ஆண்வராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஆவி யிலே தொடங்கிய ஆரம்பம் பிற்பாடு மாம்சத்திலே வளர்ச்சியடைந்து விட்டது. அதாவது, கிறிஸ்தவர்கள் என்ற போர்வையின் கீழ், உலக தின் காரியங்களால் நிறைந்திருந்தார்கள். இந்த நிலைமையானது சாத்தியம் இல்லை என்ற சில தவறான போதனைகள் ஆங்காங்கே தொனிக்கின்றது. இவர்கள் தங்களுக்கென்று உலக ஐசுவரியங்களை சேர்த்து வைத்திருப்பதால், ஆண்டவராகிய இயேசு கூறிய வார்த்தைக ளுக்கு விரோதமாக பிரசங்கித்து வருகின்றார்கள். மேலும் நம்முடைய அன்புள்ள ஆண்டவர் அவர்கள் அழிந்து போகாதபடிக்கு அவர்களை எச்சரித்து, அவர்கள் மறுபடியும் ஆவிக்குரிய நிலையை அடைவதற் குரிய ஆலோசனையை கூறியிருக்கின்றார். நான் நேசிக்கிறவர்களெவர் களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான் என்று ஆண்டவராகிய இயேசு அழைக்கின்றார். எனவே கர்த்தருடைய எச்சரிப்பின் சத்தம் தொனிக்கையில் நீங்கள் அவரண்டை சேர்ந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்விற்கு என்னை வேறு பிரித்த தேவனே, இந்த உலக அளவுகோல்களால் என் ஆவிக்குரிய வாழ்வை நிர்ணெயிக்காமல், உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து அறிய கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:7

Category Tags: