புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 13, 2024)

விழித்துக் கொண்டு ஸ்திரப்படுங்கள்

வெளிப்படுத்தல் 3:2

நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்தி ரப்படுத்து;


ஒரு நல்ல தந்தையினிடத்தில் தன் பிள்ளையைக் குறித்த அன்பிலே பல அம்சங்கள் அடங்கி இருக்கின்றது. அந்த அன்பிலே அரவணைத்தல், தேற்றி ஆறுதல் படுத்தல், தோளின்மேல் தூக்கி சுமத்தல், பாதுகாத் தால், உணவு ஊட்டுதல், மன்னித்து மறந்துவிடுதல் போன்றவை அவ ற்றுல் சில. அந்த அன்பின், மறுபக்கதிலே, இன்னும் அநேக காரியங் கள் உண்டு. தன் பிள்ளை நேரிய பாதையிலே நடக்கும் படிக்கு, போதித்து, ஆலோ சனை கூறுதல், கடிந்து கொண்டு எச்சரிப்பை வழங் குதல், உணர்வடையும்படி சிட்சை செய்தல் போன்றவை களும் அடங்கும். எனவே அன்பும் பரிசுத்தமுள்ள பரம தந்தையாகிய தேவனாகிய கர்த்தர், சபையின் போதனைகள் வழியாக, வேத வார்த் தைகள் வழியாக, சொற்பனங்கள் வழியாக, உங்களுக்கு எச்சரிப்பை வழங்கும் போது இடறலடையாதிருங்கள். மனதை கடினப்படுத்தாதிரு ங்கள். அவர் நம்முடைய பரம தந்தை. மரித்துப் போகும் படிக்கல்ல, மரித்தவைகள் உயிர் பெறும்படிக்கே நமக்கு எச்சரிப்பை வழங்குகி ன்றார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சர்தை சபையோருக்கு கூறு கையில்: 'உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவ னென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக் கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து. உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனை ப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறி யாதிருப்பாய்.' பாருங்கள் முற்காலத்திலே அக்கிரமங்கிளாலும் பாவ த்தினாலும் ஆவிக்குரிய மரணம் அடைந்திருந்த அவர்கள், ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து, மனந்திரும்பி, ஞானஸ்நானத்தை பெற்றுக் கொண்டு, அநேக காரியங்களை கேட்டு, தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொண்டார்கள். ஆனாலும், மறுபடியும் ஆவிக்குரிய மரணம் அவர்களை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டதை குறித்து, அவர்களுக்கு சுட்டிக் காட்டி, மறுபடியும் மனந்திரும்ப வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு தெளிவாக கூறியிருக்கின்றார். பிரியமானவர்களே, கர்த்தருடைய நாள் நம்மை திருடனைப் போல பற்றிக் கொள்ளாமல் இருக்கும்படிக்கு, நாம் எப்போதும் விழிப்புள்ளவர்களாக வாழும்படிக்கு, மாறுபாடான உபதேசங் களுக்கு செவிசாய்க்காமல், சத்திய வழியிலே முன்னேறுவோமாக.

ஜெபம்:

கிருபை நிறைந்த பிதாவே, நான் வெண் வஸ்திரம் தரித்து உம்மோடு வாழும்படிக்கு, நீர் தந்த வஸ்திரங்களை நான் அசுசிப்படுத்தா மல், பரிசுத்தத்தை தேவ பயத்தோடு காத்துக் கொள்ள என்னை வழிநட த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எசே 37:4-10