புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 12, 2024)

அன்பும் பரிசுத்தமும்

வெளிப்படுத்தல் 2:23

அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்;


நம்முடைய ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்து, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றி, பரலோகத்திற்கு சென்று சுமார் இரண்டாயிரம் வருடங்கள் கடந்து விட்டது. ஆனால், இன்று சில வேதப்புரட்டர்கள், இவ்வளவு காலமும் கிறிஸ்துவை பின்பற்றுகின்றவர்களிடம் இல்லாத நவீன உபதேசங்களை போதித்து, தேவன் ஆகாது என்று தள்ளி வைத்த, படைப்புக்களை ஆராதிக் கும் அந்நிய வைபவங்களை, நாங் களே கொண்டாட வேண்டும் என்று, சூரிய வழிபாடுகளிலே சிலரை ஈடு படுத்தியிருக்கின்றார்கள். அதுமட் டுமல்ல மதங்கள் மத்தியிலே நல் லிணக்கம் தேவை, அன்பு இருந் தால் போதும். அதுவே இரட்சிப் பின் மையப்பொருள் என்றும் எல்லா வழிகளும் ஒர் இடத்தில் சேரும் என்று உலகதிற்கு ஏற்புடைய உபதே சங்களை கூறுகின்றார்கள். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறி ஸ்து, தியத்திரா என்னும் சபைக்கு தூது அனுப்பும் போது, அவர்களு டைய நற்கிரியைகளையும், அன்பையும், ஊழியத்தையும், விசுவாசத்தை யும், பொறுமையையும் குறித்து சாட்சி கொடுத்தார். அன்பு உட்பட இவ்வளவு நற்கிரியைகள் அந்த சபையார் மத்தியிலே இருந்த போதும், அவர்களுக்குள் புற மத வழிபாடுகளினால் பரிசுத்த குலைச்சல் உண்டா யிருப்பதை இருப்பதைக் கண்டார். ஆதலால் அவர்களை நோக்கி: 'ஆகி லும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன் னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என் னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்க ளுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். அவள் மனந்திரும் பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசி மார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடை ய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங் களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்து கொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்ப டியே பலனளிப்பேன்.' கடுமையான எச்சரிப்பை வழங்கியிருக்கின்றார்

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நான் செய்யும் அன்பின் நற்கிரியைகள், விசுவாசம், பொறுமை போன்றவற்றின் மத்தியிலே பரிசுத்த குலைச்சலானவைகளை பின்பற்றாதபடிக்கு உன் வார்த்தையிலே நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 1:15