புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 10, 2024)

விசுவாசிகள் மனந்திரும்ப வேண்டிய இடங்கள்

வெளிப்படுத்தல் 2:7

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ள வன் கேட்கக்கடவன்;


நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்து, பரத்திற்கு சென்றபின்பு, தன்னுடைய பிரியமான சீஷனாகிய யோவானுக்கு தரிசனமாகி, அந்த சீஷனூடாக மனந்திரும்புத லின் அவசியத்தை குறித்து சபைகளுக்கு எச்சரிப்பை கொடுத்திருக்கின்றார். எபேசு என்னும் சபைக்கு அவர் கூறும்போது: உன் கிரியை களையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதி த்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; நீ சகித்துக்கொ ண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் என்று அவர்களுடைய கிரியைகளையும் பொறுமையும் குறித்து பாராட்டிக் கூறினார். ஆனாலும், இவ்வளவு நற்கிரியைகளை செய்கின்ற அந்த சபையார் மறுபடியும் மனந்திரும்ப வேண்டிய குறையொன்று அவர்களிடம் இருந்தது. மேலும் அவர் கூறுகையில் 'நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக என்று ஆலோசனை கூறினார். அப்படி அவர்கள் மனந்திரும்பாத இடத்தில் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு எச்சரிப்பை வழங்கினார். 'இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன் என்றார். அவருடைய எச்சரிப்பைக் கேட்டு, மனந்திரும்பி, ஜெயங்கொள்ளுகின்ற வர்களுக்கோ, தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் இந்த உலகத்திலிருந்து வேறுபிரிக்கப்பட்டிருக்கின்றோம். இது கிருபையின் காலம். ஆண்டவர் இயேசு நமக்காக பரிந்து பேசும் காலம். எனவே, தவறான உபதேசங்களால் பாவங்களை பாராமு கமாக விட்டுவிடாதபடிக்கு, 'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கை யிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவ ராயிருக்கிறார்.'

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகத்தின் தந்திரமான போதனைகளுக்கு நான் செவிகொடுக்காமல், ஆவியானவர் சபைக்கு சொல்கின்றதை கேட்டு, அதன்படி பரிசுத்த வாழ்வை காத்துக் கொள்ள என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 6:1-3