புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 06, 2024)

வரங்களும் வளங்களும்

தீத்து 3:10

வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.


பிதாவாகிய தேவன்தாமே தம்முடைய பிள்ளைகளுக்கு வரங்களைளும், வளங்களையும் பகிர்ந்து கொடுகின்றார். அதற்கான காரணம் என்ன? பிதாவினுடைய சித்தம் இந்தப் பூமியிலே நிறைவேறும்படிக்கு, வரங்களையும், வளங்களையும் பெற்றவர்கள், தங்கள் சொந்த வாழ்விலே பிதாவாகிய தேவனின் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும். அவருடைய சித்தத்தை நிறைவேற்றாதவன், யாருடைய சித்தத்தை செய்கின்றான்? தன் மாம்சமும் உலகமும் விரும்பு வதை செய்கின்றான். அந்த உலகமும் மாம்சமும், தேவ சித்தத்திற்கு எதிராக செய்படுகின்றவைகளாக இருந்தால், அவை எதற்கு அடிமை யாக இருக்கின்றது? நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலக முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கி றோம் (1 யோவான் 5:19) என்று பரிசுத்த வேதாகமம் இந்த உலகத்தின் ஆளுகையைக் குறித்து தெளிவாக நமக்கு கற்றுத் தருகின்றது. தன் மாம்சம் விரும்புவதை செய்பவனிடதிலே ஆவியின் கனி இருக்க முடியாது. அவர்களில் சிலர் தாங்கள் பெற்றவைகளை, கர்த்தரின் நாமத்தை கூறிக் கொண்டு, தகாதவிதமாக பயன்படுத்துகின்றார்கள். ஆதலால் ஆண்டவராகிய இயேசு: பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே, கர்த்தாவே, என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த் தாவே,கர்த்தாவே, உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தி னோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய் தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அக ன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன் என்றார். தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது. இந்த உலக பொருட்களின் ஆசீர்வாதத்தையும், செல்வ செழிப்பையும் மையமாக வைத்து உபதேசம் செய்கின்றவர்களைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கின்றோம். அவர்களின் முடிவை நியாயந்தீர்ப்பது நம்முடைய வேலையல்ல, நாமோ, வேதப் புரட்டர்களை விட்டு விலகி, சத்தியத்திலே நிலைத்திருந்து, தேவ சித்தத்தை நிறைவேற்றுவோமாக.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, இந்த உலகத்தினால் உண்டான வஞ்சகமான உபதேசங்களில் நான் சிக்கிக் கொள்ளாதபடிக்கு, கற்றுக் கொண்டபடியே விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:27