புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 05, 2024)

செயற்பாடுகளும் கனிகளும்

மத்தேயு 7:21

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என் னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.


வெளியூருக்கு வியாபார அலுவலாக செல்ல வேண்டியிருந்த பண்ணை முதலாளியொருவர், தன் மூத்த குமாரனை அழைத்து, தான் திரும்பி வரும்வரை, உன் சகோதர சகோதரிகளின் விவகாரங்களை நன்றாக கவனித்துக் கொள் என்று பல ஆலோசனைகளை கூறி, குடும்பத்தின் முழுப் பொறுபையும் அதிகாரத்தையும், செலவுக்கு வேண்டிய பணத் தையும் கொடுத்து சென்றார். தந்தையானவர் சென்ற பின்பு, மூத்த குமாரனானவன், குடும்பத்தின் விவகாரங்களை கவனிக்கும்படி பல நன்மையான காரியங்களை செய்து வந்தான். ஆனால், தந்தையார் கூறியத்தின் கருபொருளை விட்டு விட்டு, தனக்கு இலாபம் உண்டாகக்கூடிய பிரகாரமாக காரியங்களை செய்து வந்தான். அவன் சகோதர சகோதரிகளும் சில நன்மைகளை அடைந்தார்கள், ஆனால் மூத்த குமாரனானவனோ, தந்தையார் கூறிய கருப்பொருளை விட்டு, தனக்கு கிடைத்த அதிகாரத்தையும், பொறுப்பையும், ஐசுவரியத்தையும், சுய இலாபம் கருதி, தனக்கு பெயருண்டாக்க காரியங்களை முன்னெடுத்து வந்தான். சில காலத்திற்கு பின், தந்தையார் வீடு திரும் பிய போது, தன் மூத்த குமாரனின் செயல்களையும் அதன் கருப்பொருளையும் அறிந்தபோது, தன் மூத்தகுமாரன் மேல் கோபம் கொண்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த மூத்த குமாரனுக்கு அதிகாரமும், பொறுப்பும், ஐசுவரியமும் கொடுக்கப்பட்டது. அவன் வாழ்விலே நன்மையான செயற்பாடுகள் இருந்ததை ஒருவரும் மறுக்க முடியாது. ஆனால், அவன் தந்தையாரின் சித்தத்தை நிறைவேற்றி முடித்தானோ என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவனுடைய செயற்பாடுகள் நன்மைக்குரியதாக இருந்தபோதும், அவன் இருதயத்திலே, மாம்சதத்தின் எண்ணங்கள் தலைதூக்கி இருந்ததால், அவன் கனியற்ற வாழ்க்கை வாழ்பனாகவே இருந்தான். நம்முடைய கர்த்தரும், உண்மையுள்ளவர்கள் என்று கருதி, வரங்களையும், வளங்களையும் தம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கின்றார். அவைகளை சிலர், தங்கள் சுய இலாபத்திற்கும், தங்களுக்கும் தங்கள் சந்ததிக்கும் பெயரும் புகழும் உண்டாக்க பல செயற்பாடுகளை கர்த்தரின் நாமத்திலே செய்கின்றார்கள். ஆனால், கனியற்ற அவர்களை கர்த்தர் உண்மையும் உத்தமுமுள்ள ஊழியனே என்று அழைப்பாரோ? அல்லது உங்களை அறியேன் என்று சொல்வாரோ?

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய நாளிலே, உமக்கு முன்பாக உண்மையும் உத்தமமுள்ளவனாக நான் நிற்கும்படிக்கு, இந்நாட்களிலே உம்முடைய திருச்சித்தத்தை செய்ய என்னை வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 5:6