தியானம் (ஐப்பசி 03, 2024)
களைகளும் கனிதரும் மரங்களும்
மத்தேயு 7:20
ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால் காலத்தை ஆதயப்படுத்துக் கொள்ளுங்கள். நாட்கள் எண்ணும் அறிவடையும்படிக்கு, ஞானமுள்ள இருதயத்தை வாஞ்சியுங்கள். எல்லாவற்றையும் வேத வார்த்தைகளின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்த்து, நலமானதை பற்றிக் கொள்ளு ங்கள். கள்ளப் போதனைகளுக்கு விழி ப்புள்ளவர்களாயிருங்கள். ஆட்டுத்N தால் போர்த்த ஒநாய்கள் ஆங்கா ங்கே இருக்கின்றார்கள் என்று பரிசு த்த வேதாகமம் நமக்கு எச்சரிப்பை வழங்கியிருக்கின்றது. அன்று மட்டு மல்ல, இன்றும் அப்படிப்பட்டவர்ள் நம் மத்தியிலே இருக்கின்றார்கள். இவர்ளை எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதை பரிசுத்த வேதாகமம் வழியாக அறிந்து கொள்ளுங்கள். இந்த பூழியிலே ஒரு பலன் தரும் மரமொன்றை சிறு கன்றாக நட்டு, அது மரதாக வளர்ந்து கனி கொடு க்கும் காலம் வரை காலத்திற்கு காலம், பருவத்திற்கு பருவம் பராம ரிப்பது கடினமானதா அல்லது பிரயோஜனமற்ற களைகளை வளர்ப்பது கனடினமானதா? களைகளை ஒருவரும் விதைக்க வேண்டிய அவசிய மில்லை. அதைப் பராமரிப்பதற்கு நிலத்தை பண்படுத்த தேவையு மில்லை. அது தானாவே இந்தப் பூமியிலே பரவி, வளர்ந்து வருகி ன்றது. ஆனால், கனி கொடுக்கும் மரத்தை நாம் நன்றாக பராமரித்து வளர்க்க வேண்டும். அதின் உயரத்தினால் அல்ல, அதன் தண்டின் பரமனினானல் அல்ல, அது செழிப்பாக வளர்ந்திருப்பதினால் மாத்திரம் அல்ல, மாறாக, அதன் கனியினாலே அது நல்லதோ அல்லது கெட் டதோ என்று நிர்ணெயிக்கப்படும். அதுபோலவே, ஒரு மனிதனின் வாழ் விலே இருக்கும் வரங்களினாலே மாத்திரம் அல்ல, அவனுடைய செழி ப்பான உலக வாழ்வினால் அல்ல, அவன் சமுக அந்தஸ்தினாலே அல்ல, சத்திய வேதம் கூறும் கனி அவன் வாயில் மாத்திரமல்ல, அவன் வாழ்வில் இருக்கின்றதா என்று ஆராய்ந்து பாருங்கள். புசிப்பதற்காக புளிப்பானதும், கசப்பானதும், ஆகாததுமான கனிகொடுக்கும் வாழ்க்கை கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவின் போத கர்களுமல்ல. எனவே, வெளிதோற்றங்களினாலே அல்ல, உலகத்தினால் உண்டான ஆசீர்வாதகளினாலேயல்ல, அவர்களை பின்பற்றும் ஜனத் தொகைகளினாலேயுமல்ல, அவரவர் தங்கள் சொந்த வாழ்க்கையிலே கொடுக்கும் கனிகளினாலே, தேவனுடைய போதகர்கள் யார் என்பதை நீங்கள் நிதானித்து அறிந்து கொள்ளலாம் என்று ஆண்டவராகிய இயேசு தாமே நமக்கு முன்னதாகவே கூறியிருக்கின்றார். சத்திய ஆவியானவர்தாமே உங்களுக்கு துணையாக இருக்கின்றார்.
ஜெபம்:
பரிசுத்தமும் உண்மையுமுள்ள தேவனே, வெளியான கிரியை களைப் பார்த்து நான் இழுப்புண்டு போகாமல், வஞ்சிக்கும் ஆவிகளை நிதானித்து அறியும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 2 தீமோ 3:1-9