புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 02, 2024)

பலவித போதனைகள்

எபேசியர் 4:14

மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலை கிறவர்களாயிராமல்


ஒரு வாலிபனானவன், தன் சிறு பிராயத்திலே தன் தகப்பனானவரின் சொல்லை தட்டிக் கழிக்காமல், அவைகழைள வெள்ளித்தட்டில் வைக் கப்பட்ட பொற்பழங்கள் போல, பெருமையயோடு கைகொண்டு வந் தான். வாலிப பிராயத்தை அடைந்த பின்னர், தன் தகப்பனானவரின் நல் ஆலோசனைகள் அவன் மனதிலே கச ப்பை உண்டு பண்ண தொடங்கிவிட் டது. அதனால், வேறு எங்கேயாவது, தான் விரும்பிய பிரகாரமாக வாழ, தனக்கேற்ற ஆலோசனைகள் கிடை க்குமா என்று வேறு ஆலோசகர்களை தேடினான். பாடசாலையிலுள்ள சில ஆசிரியர்கள், தன் நண்பர்களின் தகப் பன்மார் போன்றவர்கள் பொதுவான ஆலோ சனைகளை வழங்கி னார்கள். அந்த ஆலோசனைகள் அவனுடைய தனிப்பிட்ட பெலவீனங்கள், தவ றான வழிகளைக் குறித்து நேரடியாக சுட்டி காட்டாததால், அந்த ஆலோ சனைகளை ஆர்வத்தோடு கேட்டான். ஆலோசனை கூறியவர்களும் அவன் ஒரு கீழ்படிவுள்ள மாணவன் என்றே கூறிக் கொண்டார்கள். ஆனால், அவனுடைய தகப்ப னானவரைப் போல, அவனுடைய உண் மையான பிரச்சனை என்னவென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அவனுக்கு ஆலோசனை வழங்கியவர்கள் அவ னைக் குறித்த எந்த பொறுப்பும் இல்லாதவர்களாகவே இருந்தார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் தேவனை ஆராதித்து, சேவி க்கும்படிக்கு சத்திய வார்த்தைகளை சுத்தமாக பேசும் ஆவிக்குரிய வழிநடத்துதலை தரும் ஒரு சபையை தெரிந்து கொள்ளுங்கள். அதை நிச்சயப்படுத்திக் கொண்ட பின்பு, அங்கே உங்களுக்கு கொடுக்கப்படும் ஆலோசனைகளை கேளுங்கள். சில ஆலோசனைகள் கசப்புள்ளதாக தோன்றலாம். ஆனால், அந்த நேரத்திலே வேத வார்த்தையின் வெளி சத்திலே உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, வேதனையு ண்டாக்கும் வழிகள் ஏதேனும் இருக்குமென்றால், அவைகளை விட்டு விடுங்கள். கர்த்தர் ஏற்படுத்திய ஒழுங்குகளுக்கு கீழ்படியுங்கள். நாட்கள் பொல்லாதவைகளாக இருப்பதால், போதனைகள் மாற்ற வழிதேடாமல், உங்கள் மனதை தேவ வார்த்தையின்படி மாற்றிக் கொள்ளுங்கள். மந் தைகள் மேய்ப்பனின் சத்தத்திற்கு கீழ்படிக்கின்றது. பிரதான மேய்ப்ப ராகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசுவே, நம்மை வழிநடத்த மேய்ப்பனை ஏற்படுத்தியிருக்கின்றார்.

ஜெபம்:

நிலைத்திருந்து கனிகொடுக்கும்படி என்னை அழைத்த தேவனே, காற்றுக் அடிப்பட்டு திரியும் அலைகளைப் போல, என் மனம் அங்கும் இங்குமாக அலைந்து திரியாதபடிக்கு என்னை உம் வழியிலே நடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22