புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 01, 2024)

கர்த்தர் செய்த உபகாரங்கள்

சங்கீதம் 103:2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.


இந்த வருடத்தின் கடந்த நாட்களை திரும்பி பார்த்து, காலைதோறும் தேவன் நம்மேல் பொழிந்த அருவருடைய புதுக் கிருபைக்காக அவ ருக்கு நாம் நன்றி செலுத்துவதே நமக்கு ஏற்புடையதாயிருக்கும். சில வேளைகளிலே, நான் எதற்காக நன்றி சொல்ல முடியும், நான் கேட்டதை கர்த்தர் எனக்கு தரவில்லையே என்று சில விசுவாசிகள், தங்களுக்குள் நொந்து கொள்ளலாம். ஒரு சிறு பையனானவன் தன் தகப்பனிடம் தன் அறிவுக்கெட்டி யபடி, தன் தன் மனத்திற்கு விரு ம்பான காரியங்களை தன் தகப்ப னானவரிடம் கேட்கின்றான். அவற்றில் சிலவற்றை தகப்பனானவர், அவனுக்கு தற்போது தடை செய்து வைத்திருந்தால், அவன் தன் அதிருப்தியை பல வழிகளிலே காண் பித்துக் கொள்வான். நான் நேசிக்கும் என் தகப்பனானவர், ஏன் நான் கேட்பதை எல்லாம், உடனடியாக தரமால் காலம் தாழ்த்துகின்றார் என்று மனக்குழப்பம் அடைவான். ஆனால், காலங்கள் கடந்து சென்று, அவன் அறிவுக்கு வரும் போது, தன் தகப்பனானவர் தன்னை வழிடத்தி வந்த வழிகளை நினைத்து பெருமிதமடைவான். அதுபோலவே, பல காரியங்கள் நமக்கு புரியாத புதிராக இருக்கலாம். ஆனால், நம்முடைய பரம தகப்பனானவர் நம்மை நேசிக்கின்றார் என்றும், அவர் ஒருபோதும் தீமை செய்யமாட்டார் என்றும் நீங்கள் அறிந்திருக்தால், அவருடைய நேரத்திற்காக காத்திருங்கள். கடந்த நாட்களிலே, நாம் அறிந்தோ அறி யாமலோ பல தவறுகளை செய்திக்கலாம். நீங்களும் நானும் மாத்திரமல்ல, உங்களுக்கு அன்பானவர்களும், எனக்கு அன்பானவர்களும் கூட சொல்லாலும், செயலாலும், சிந்தனைகளாலும், பல முறை வழிவில கிகப் போயிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு முறையும், நாம் அழிந்து போகாதபடிக்கு, அவருடைய கிருபை நம்மை தாங்கி வழிநடத்தி வருகி ன்றது. அவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். மனதுருக்கமுள்ள நம்முடைய பரம பிதாவானவர், ஒரு தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இர ங்குகிறதுபோல, தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நாம் அறிந்த நன்மைகளோ கொஞ்சம், நாம் அறியாதவைகளோ அநேகம், பொதுவாக நாம் அவரிடம் கேட்பவைகளோ அநித்தியமானவைகள், ஆனால் அவர் நமக்காக வைத்திருப்பதோ மேலானவைகள். எனவே, கர்த்தரை முழு உள்ளத்தோடு அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரியுங்கள். அவர் செய்ய நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி சொல்லுங்கள்.

ஜெபம்:

நன்மைகளின் ஊற்றாகிய என் தேவனே, நீர் எனக்கு செய்த நன்மைகளை நான் ஒரு போதும் மறந்து போகாமல், நன்றியறிதலுள்ளவனாக இருக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:18