தியானம் (புரட்டாசி 30, 2024)
வெளிச்சத்தின் பிள்ளைகள்
எபேசியர் 5:8
இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்து கொள்ளுங்கள்.
ஒரு மனிதனானவன், வியாபார அலுவலாக, மாலை நேரங்களிலே பக்கத்து கிராமத்திலுள்ள கிராமத்திற்கு சென்று வருவது வழக்க மாயிருந்தது. அவனுடைய வயதான தந்தையார், அவனை நோக்கி: மகனே, மாலையிலே சென்று, இரவிலே வீடு திரும்புகின்றாய். இது மழை காலமாக இருக்கின்றது, கார்மேகங்கள் சூழ்ந்தால், காரிருளிலே பயணம் செய்ய முடியாது. எனவே, இந்த விளக்கை நீ எடுத்துக் கொண்டு செல்லு என்று ஆலோசனை கூறினார். அதற்கு அந்த மனிதனானவன்: அப்பா, என் கண்பார்வை நன்றாகவே இரு க்கின்றது, எனவே எனக்கு வெளிச்சம் தேவையில்லை. உங்கள் கண்பார்வை மங்கியிருப்பதால், உங்களுக்குத்தான் வெளிச்சம் இல்லாமல் நடக்க முடி யாது என்று கூறிவிட்டு தன் வழியே போய்விட்டான். ஒரு நாள் இரவு நேரம் அவன் வீடு திரும்பும் போது, கார்மேகங்கள் சூழ்ந்து கொண்டது. ஒரு அடி எடுத்து வைக்க முடியாதபடிக்கு, எங்கும் காரிருளாக இருந் தது. வன விலங்குகளுடைய சத்ததும், சீறும் சர்பங்களின் சத்தமும் அவன் காதிலே ஒலித்தது தவிர, அவன் அவைகளை தன் கண்களி னால் காண முடியாமல், திகில் அடைந்தான். ஜீவ ஒளியாகிய ஆண்ட வர் இயேசுவினால் வெளிச்சத்தின் பிள்ளைகளாக்கப்பட்ட வர்களே, நாம் எப்போதும், எவ்வேளையும், எந்தப் பருவத்திலும், திவ் விய ஜீவ ஒளியிலே நடக்கின்றவர்களாக காணப்படவேண்டும். 'முற்கா லத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக் கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துn காள்ளுங்கள்.' 'நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமு ள்ளவர்களைப் போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள் ளுங்கள். ஆகை யால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்.' ஒரு காலத்திலே ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொண்டவன், எனவே நான் எப்படியும் வாழ்ந்து கொள்வேன் என்று மறுபடியும் அந்தகார கிரியைகளுக்கு உடன்படுகின்றவர்கள், வேத வார்த்தைகளை தங்களுக்கேற்றபடி புரட்டுகின்றார்கள். தேவனினடத்திலே மன்னிப்பு உண்டு, ஆதாலால், நான் எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று போதிக்கின்றவர்களை விட்டு விலகி, விழிப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்.
ஜெபம்:
ஜீவ ஒளிளை என்னுள் பிரகாசிப்த்த தேவனே, மற்றவர்கள் தூங்குகிறதுபோல நானும் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்த பத்தியுடையவனாக, வெளிச்சத்திலே நடக்க என் மனக் கண்களை பிரகாசிப்பீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 தெச 5:5-8