தியானம் (புரட்டாசி 29, 2024)
பரிசுத்தவான்களுக்கு தகாதவைகள்
எபேசியர் 5:6
ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;
'சிறுவர்கள் வாலிபர்கள் எச்சரிக்கையாயிருங்கள், தன் போலியான இனிய வார்த்தைகளால் வஞ்சிக்கும் மனிதனொருவன் எங்கள் மத்தி யிலே இருக்கின்றான்.' என்று ஒரு பட்டணத்திலே செய்தி வாயிலாக ஜனங்களுக்கு எச்சரிப்பு வழங்கப்பட்டது. ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிக்க முடியாத இரத்தினாலே மீட்கப்பட்ட பரிசுத்தவான்களே, நம் மத்தியிலும் அப்படிப்பட்ட வஞ்சகனொருவன் சுற் றித்திருக்கின்றார் என்று பரித்த வேதாகமம் நமக்கு எச்சரிப்பை வழக்கியிருக்கின்றது. 'அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.' 'அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.' ஏன்று நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறியிருக்கின்றார். அன்று தேவ மகிமையை தரித்திருந்த ஆதாம் ஏவாளை வஞ்சித்தவன், இன்று சும்மா இருப்பானோ? 'கெர்ச்சிக்கின்ற சிங்கம் போல, யாரை விழுங்கலாம் என்று சுற்றித்திருக்கின்றான்.' எனவே, நீங்கள் அறிந்திருக்கின்ற இனி பாவம்; செய்யாதே என்ற சத்தியத்தை விட்டு, பாவம் செய்யதாலும் பரவாயில்லை என்று இனிய வார்த்தைகளை போதிக்கின்றவர்களை விட்டு விலகி ஓடுங்கள். 'மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற் றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. அப்படியே வம்பும், புத்தியீ னமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்கார னாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ் துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;. அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள்.' என்று பரிசுத்த வேதா கமம் கூறுகின்றது. எனவே, கிருபையின் காலத்திலே வாழும் நீங்கள், தேவ கிருபையை உதாசினப்படுத்தாதபடிக்கு, காலத்தை பிரயோஜ னப்படுதிக் கொள்ளுங்கள். வீண் போதனைகளை பின்பற்றி பின்வாங்கிப் போகாமல், சத்தியதிலே நிலைத்திருங்கள்.
ஜெபம்:
பரிசுத்தமுள்ள பிதாவே, மாயமான போதனைகளுக்கு இடங் கொடுத்து பின்வாங்கி போகாமல், பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடு காத்துக் கொள்ள பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யோவான் 8:44