புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 28, 2024)

பிரியமான பிள்ளைகள்

எபேசியர் 5:1

ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப் போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,


நாம் ஆராதிக்கும் தேவன் அன்புள்ளவர். அவர் கிருபை என்றுமுள்ளது. ஆதலால், மனிதகுலம் பாவத்திலே மாண்டு அழிந்து போகாமல், விடுத லையடையும்படிக்கு தம்முடைய ஒரே பேறான குமாரனை இவ்வுல கிற்கு தந்தார். இழந்து போன திவ்விய சுபாவத்தை நாம் பெற்றுக் கொள்ளும் வழியை உண்டு பண்ணி, அவரோடு நாம் என்றென்றும் வாழும்படிக்கு சித்தமுள்ளவராக இரு க்கின்றார். அவருடைய திவ்விய சுபாவங்களிலே மாறுதல் ஏதுமில்லை இல்லை. அவர் அன்புள்ளவராக இரு ப்பது போல நாமும் அன்புள்ளவ ர்களாக இருக்கும்படி விரும்புகின் றார். அவர் கிருபை நிறைந்தவராக இருப்பது போல நாமும் கிருபை நிறைந்தவர்களாக வாழும்படிக்கு விரும்புகின்றார். அதுமட்டு மல்ல, அவர் பரிசுத்தமும் நீதியும் உள்ளவராக இருப்பது போல, நாமும் பரிசுத்தமும் நீதியுள்ளவர்களுமாக இருக்கும்படிக்கு அவர் விரும்புகின் றார். ஆனால், இன்று சில விசுவாசிகள் கூட, 'நாங்கள் மறுபடி பிறந்த வர்கள், இரட்சிப்படைந்தவர்கள், எப்படியும் பரலோகம் சென்று விடு வோம்' என்று பரிசுத்த அலங்காரத்தை தள்ளிவிட்டு, இந்த உலகத்தின் தத்துவங்களை தேவனுடைய போதனையாக்கிக் கொண்டு, அவருடைய பரிசுத்தத்தையும், நீதியையும் அசட்டை செய்யகின்றவர்களாக மாறிவிடு கின்றார்கள். நாம் அவருக்கு பிரியமுள்ள பிள்ளைளாக வாழும்படிக்கு நம்மை வேறு பிரித்தார். ஒரு நல்ல தகப்பன் தன்னுடைய பிள்ளைகள் தன்மைப் போல நல்ல சுபாவமுடையவர்களாக இருக்கும்படிக்கு விரும் புவதுபோலவே, நம்முடைய பரம பிதாவும், அவருக்கு பிரியமுள்ள பிள் ளைகளாக நாம் திவ்விய சுபாமுடையவர்களாக வாழும்படிக்கே விரும் புகின்றார். 'கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாச னையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.' 'கர்த் தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடி ந்துகொள்ளுங்கள். அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியை களைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே.' ஏன்று பரிசுத்த வேதாகத்திலே வாசிக்கின்றோம். எனவே, இந்த உலகத்தால் கலப்ப டமான போதனைகளை பின்பற்றாமல், சத்தியதின் வழியிலே நடத்து, இடுக்கமான வாசல் வழிலே நுழையுங்கள்.

ஜெபம்:

அன்பின் என்னை பரிசுத்தனாக்க சித்தம் கொண்ட தேவனே, நான் மறுபடியும் தர்க்கம் பண்ணுகின்றவனாவும், மன கடினமுள்ளவனாகவும் மாறிவிடாதபடிக்கு, என் மனக் கண்களை பிரகாசிப்பிக்கச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:14