தியானம் (புரட்டாசி 27, 2024)
நீதியுள்ளவர்களாயிருங்கள்
சங்கீதம் 97:2
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
ஒரு ஊரிலே, பராக்கிரமமும், ஐசுவரியமுமுள்ள அதிகாரியொருவன் இருந்தான். அவன் தன் அகதிhரத்தையும் துஷ;பிரயோகம் செய்யாதவ னும், நீதியிலே நிலை நிலைநிற்பவனுமாக இருந்தால், மற்றய அதிகா ரிகள், ஜனங்கள் மத்தியிலே கனமும் நன்மதிப்பு பெற்றவனுமாக இரு ந்தான். இத்தனை செல்வாக்குகள் உள்ள அந்த அதிகாரியின் இரக்க முள்ள மனதை கண்டு பலரும் ஆச் சரியப்பட்டார்கள். ஒருநாள், வாலிப னொருவன் வெகு வேக மாக ஒடிச் சென்று, அந்த ஐசு வரியவானின் காலடியிலே விழு ந்து. ஐயா, என்னை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக் கேட்டான். அதற்கு அந்த அதிகாரியானவன்: நான் உன்னை காப்பாற்றுவதற்கு உனக்கு நேர்ந்த ஆபத்து என்ன என்றார். வாலிபனானவன் அவரை நோக்கி: குடும்ப கஷ;டத்தினால் கடையொன்றிலே களவு செய்யும் போது, அகப் பட்டுவிட்டேன். என்னை அடிக்கும்படிக்கு அநேகர் காத்திருக்கின்றார்கள் என்றான். அதற்கு அவர்: நீ செய்தது குற்றம் என் பதை உணர்கின் றாயா என்று கேட்டார். அதற்கு அவன்: ஆம், ஐயா, எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்றான். அதற்கு அவர்: நீ என்னோடு வா, உன்னை ஒருவரும் அடிக்க மாட்டார்கள். நீ களவு எடுத்த தொகையை நான் திரும்ப செலுத்துகின்றேன். உன்னை அடிக்கும்படி வருகின் றவர்கள் முன்னிலையிலே மன்னிப்பை கேட்டு, நான் அப்படி இனி செய்யமாட்டேன் என்று அவர்களிடம் மனதார அறிக்கை செய். எல்லாம் சரியாகிவிடும் என்றார். அதற்கு அவன், அப்படியெல்லாம் மன்னிப்பு கேட்க முடியாதைய்யா. நீங்கள் மிகவும் இரக்கமுள்ளவர் எனவே உங் கள் அதிகாரத்தை பாவித்து, இந்த வழக்கை எப்படியாவது தள்ளுபடி செய்துவிடுங்கள் என்றான். அதற்கு அவர்: மகனே, நீ உன் சிந்தையை மாற்றிக் கொள்ள வேண்டும். நான் உனக்கு இரக்கம் காட்ட ஆயத்த மாகவே இருக்கின்றேன். அதற்காக நான் அநீதி செய்ய மாட்டேன். உன் அநியாயத்தை மூடி மறைக்க இன்னும் அதிகமாக அநீதி செய்யாதே என்றார். பிரியமான வர்களே, நம்முடைய தேவனாகிய கர்த்தரைப் போல் நம்மை அன்பு செய்ய ஒருவருமில்லை அதே வேளையிலே அவருடைய நீதியிலும், பரிசுத்ததிலும் அவருக்கு நிகரானவர்கள் எவரு மில்லை. எனவே தேவன் இரக்கம் செய்வார் என்று கூறி, அநியாயங் களிலே நிலைத்திருக்காதிருங்கள். 'நம்முடைய பாவங்களை நாம் அறிக் கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ள வராயிருக்கிறார்.' (1 யோவான் 1:9)
ஜெபம்:
நீதியும் நியாயமுமுள்ள தேவனே, நான் ஒருபோதும் அநியாயம் செய்வதில் நிலைத்திருக்காமல், வேதனை உண்டாக்கும் வழிகளை விட்டு, உமக்கு பிரியமான வழியிலே என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 11:7