புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 26, 2024)

கீழ்படியாமையின் பிள்ளைகள் யார்?

கொலோசெயர் 3:10

தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த சில மனிதர்கள், தங்களுக்கு உண்டான பெலத்தையும், தாலந்துகளையும், துஷ;பிரயோகம் செய்து, ஊர் மக்களிடம் சென்று கப்பம் வேண்டுவதிலும், சிலரை கொள்ளையடிப்பதிலும் தங்கள் வாழ்நாட்களை செலவழித்து, வீணர்களாக சுற்றி திரிந்தார்கள். ஒரு நாள் அந்த ஊரின் அதிபதியின் சேவகர்கள் அவர்கள் யாவரையும் பிடித்து, கட்டி, ஊரின் அதிபதியிடம் தீர்ப்புக்காக கொண்டு வந்தார்கள். அவர் இளவயதுடையவர்கள் என்று கண்ட அதிபதி, அவர்கள் மேல் மனதுருகி, இனி நீங்கள் கொள்ளையடித்து வாழத் தேவையில்லை. நான் உங்களை வேலைக்கு அமர்த்துகின்றேன். அதற்குரிய ஊதியத்தை நான் உங்களுக்கு கொடுப்பேன். என் சேவ கர்களோடு சேர்ந்து, சேவர்களாக நீதியை நடப்பிக்க உழையுங்கள். நலமானதை கற்றுக் கொள்ளுங்கள். ஊரையும், ஊர் மக்களின் நலமான வாழ்க்கைகாக உங்கள் பெலத்தையும், தலாந்துகளையும், நேரத்தையும் முதலீடு செய்யுங்கள் என்று, அவர்களுக்கு வேண்டிய புதிய உடைகள், குதிரைகள், பயிற்சிகள், சலுகைகள் யாவற்iயும் கொடுத்து அவர்களை தன்னிடமாய் சேர்த்துக் கொண்டான். ஒரு சில ஆண்டுகள் அந்த மனி தர்கள் இராபக்தியோடு வேலை செய்தார்கள், ஆண்டுகள் கடந்து சென்ற போது, அவர்கள் மறுபடியும், தங்கள் பழைய வாழ்க்கைக்கு இட்டுச் சென்ற வழிகளை பின்பற்றினார்கள். தங்கள் இச்சைகளுக்கு இடங்கொடுக்க ஆரம்பித்தார்கள். அதிபதியின் பாதுகாப்பிற்குள்ளும், இரக்கத்திற்குள்ளும் இருந்து கொண்டு, துஷ்டர்களாக மறுபடியும் வாழ்ந்து வந்ததை கண்டு அதிபதி, அவர்கள் மேல் மிகவும் கோபம் கொண்டு, அவர் களை தண்டித்து, சிறையிலே போடுவித்தான். மேலானவைகளை நாடு ம்படி பிரித்தேடுக்கப்பட்ட பிரியமானவர்களே, பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித் தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கி றது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும் போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். ஆகையால், விபசா ரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராத னையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின் பொருட்டே கீழ்ப்படி யாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.

ஜெபம்:

என்மீது அன்புகூர்ந்து என்னை உம்முடைய பிள்ளையாக்க சித்தம் கொண்ட தேவனே, நான் உம்முடைய அழைப்பைக் குறித்து அசதியாக இல்லாமல், உணர்வுள்ள வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 5:8