தியானம் (புரட்டாசி 25, 2024)
பிதாவானர் பாராட்டிய அன்பு
1 யோவான் 3:1
நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்.
ஒரு தேசத்தின் குறிப்பிட்ட பகுதியிலே, ஏதோ காரணத்தினால், குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்ட ஒரு ஜனக்கூட்டம் வாழ்ந்து வந்தார்கள். குற்றவாளிகள் என்று தீர்க்கப்பட்ட மனிதர்கனோடு மட்டுமல்ல, அவர்கள் மனைவி, பிள்ளைகள், சந்தியாரோடும், அந்த தேசத்திலுள்ள எவரும் உறவு கொண்டாடவே, நட்பாக இருக்கவோ விரும்பியதில்லை. இப்படியாக அவர்களுக்கு ஆதராவாக எந்த ஏழையோ, பணக்காரணோ, இல் லாதிருந்த சமயத்திலே, அதை அறிந்து கொண்ட அந்த தேசத்தின் ராஜா வானவன், அந்த இடத்திற்கு சென்று, அவர்களோடு பேசி, அவர் கள் குற்றங்கள் யாவையும் மன்னித்து, அவர் களை நோக்கி: நீங்கள் என்னுடைய சொந்த ஜனங்கள் என்று அவர்க ளோடு உறவு பாராட்டினான். அந்த உறவு பாராட்டுதலுக்கு அந்த ஜனங் கள் பாத்திரராக இல்லாதிருந்த போதும், அவர்களை தன்னுடைய சொந்த ஜனங்கள் என்று பகிரங்கமாக அறிக்கையிடுவதற்கு அந்த ராஜாவானாவன் வெட்கப்படவில்லை. பல ஆண்டு காலமாக, சந்ததி சந்ததியாக ஒடுகக்பபட்ட அந்த ஜனங்கள் ராஜாவினுடைய இரக்த்தை குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இவ்வண்ணமாகவே, எல்லோரும் நித்திய கோபாக்கினைக்கு பாத்திரராக இருந்த போது, பிதாவாகிய தேவன்தாமே, நாம் அழிந்து போகதபடிக்கு தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை நமக்காக அனுப்பினார். அவர் இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே, ஏழைகள், எளியவர்கள், பாவிகள், துரோகிகள், நோயாளிகள் என்று சமுதாயத்தினாலே தள்ளிவிடப்பட்டு, இனி வாழ்வு இல்லை என்ற நிலைமையிலுள்ளவர்களின் பாவங்களை மன்னித்து, இனி பாவம் செய்யாதே என்று கூறி, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தார். அவர்களை தம்முடைய சொந்த ஜனங்களாக ஏற்றுக் கொண்டார். இனி வாழ்வு இல்லை என்று நம்பிக்கை இழந்து போயிருந்த அவர்களுடைய வாழ்க்கையிலே அவர் நம்பிக்கையாக வந்தார். அந் நாட்களிலே மாத்திரம் அல்ல, அன்றும், இன்றும், என்றும் அவர் மாறாதவராகவே இருக்கின்றார். தம்மிடத்திலே வரும் எவரையும் அவர் புறம்பே தள்ளுவதில்லை. பிதாவாகிய தேவன்தாமே தம்முடைய சொந்தக் குமா ரனாகிய இயேசு வழியாக நமக்கு மீட்பை தந்தது மட்டுமல்ல, அவர் நம்மை தம்மடைய சொந்தக் குமார்கள் குமாரத்திகள் என்று அழைக்க ஒருபோதும் வெட்கப்படதில்லை. எந்த தகுதியுமற்ற நம்மிடத்தில் அவர் பாராட்டிய அன்பு எவ்வளவு பெரியதென்று பாருங்கள்.
ஜெபம்:
அப்பா பிதாவே என்று உம்மை அழைக்க, புத்திர சுவிகாரத்தின் ஆவியை எனக்கு தந்த தேவனே, நீர் கொடுத்த இந்த பெரிதான சிலாக்கியத்திற்காக நன்றி. நான் எப்போதும் உம்மை பற்றிக் கொண்டிருக்க கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 8:15