தியானம் (புரட்டாசி 23, 2024)
'பிள்ளைகள்'
எபேசியர் 2:1
அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதர்கள் யாவரும் தேவனுக்கு பயப்படாதவர்களும், துன்மார்க்கமான வழியை வாஞ்சித்து பின்பற்றுகின் றவர்களாகவும் தங்கள் கண்போன வழியிலே வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரிலே அநியாயங்களும், அழிவுகளும் ஒரு கொள்ளை நோயைப் போல பரவிக் கொண்டிருந்தது. அந்த வேளையிலே, அந்த ஊர் வழி யாக சென்ற ஐசுவரியவானொரு வன், தெருவோரமாக மரிக்கும் தறு வயில் கைவிடப்பட்டிருந்த ஒரு சிறு பையனை கண்டு, அவன் மேல் மனதுருகி, துரிதமாக பட்டணத்திலு ள்ள மருத்துவனைக்கு எடுத்துச் சென்று, அவன் உயிரை காப்பாற்றி, அந்த நாட்டின் சட்டத்தின்படி ஒழுங்கு முறைகளைபடி சட்டபூர்வ மாக அவனை தனது பிள்ளையாக்கி கொண்டான். பிள்ளையாண்டா னும், ஐசுவரியவானின் வீட்டிலே, ஒரு செல்லப் பிள்ளையைப் போல சுதந்திரமாக வளர்ந்து வந்தான். பல ஆண்டுகள் சென்று வாலிப பிரா யத்தை அடைந்த பின்னர், அவன் தவறான பழக்கவழக்கங்களு ள்ள சிலரை தன் நண்பர்க ளாக்கிக் கொண்டு, அவர்களோடு தன் காலத்தை வீணடித்து வந்தான். அவன் தந்தையாகிய அந்த ஐசுவரியவான், அநேக புத்திமதிகளையும், ஆலோசனைகளையும் கூறி, அவனை கடிந்து கொண்ட போதும், அவன் கீழ்படிவற்றனாக, தான் பிறந்த இடத்திலுள்ள ஜனங்களைப் போல, துன்மார்க்கத்தை வாஞ்சித்து அதைப் பின்பற்றி வந்தான். அவனுடைய தந்தையார், அவனை துன்னமார்க்த்திலிருந்து காப்பாற்ற பல சந்தர்பங்களை கொடுத்து வந்த போதும், அவன் அதை அசட்டை செய்து வாழ்ந்து வந்தான். பிரியமான சகோதர சகோதரி களே, அந்த வாலிபனானவன், சிறு வயதிலே, அழிவுக்குரிய பிள்ளை யாக இருந்தான். அவ்வழியாய் சென்ற இரக்க மனம்படைத்த அந்த ஐசுவரியவானால், அவன் அவருடைய சொந்தப் பிள்ளையாக மாற்றப் படான். வாலிப பிரயாயத்தை அடைந்த போது, உலகத்தின் ஆசை இச் சைகளுக்கு தன்னை ஒப்புக் கொடுத்து, அவன் கீழ்படியாத பிள்ளயாகி விட்டான். நாம் யாவரும் கோபக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம், கிறிஸ்து இயேசு வழியாக தேவ பிள்ளைகளாக்கப்பட்டோம், மறும் படியும் நாம் நம்மை மாம்சத்தின் கிரியைகளுக்கு மனதார நம்மை ஒப் புக் கொத்தால், நாம் கீழ்படியாமையின் பிள்ளைகளாகிவிடுவோம். நாமோ அப்படியாக மாறிவிடாமல் எப்போதும், உணர்வுள்ள தேவ பிள்ளைகளாக உணர்வுள்ள வாழ்க்கை வாழ்வோமாக.
ஜெபம்:
மேலானவைகளை தேடும்படிக்கு என்னை அழைத்த தேவனே, நான் எப்போதும் உம்முடைய வார்த்தையின்படி கீழ்படிவுள்ள, மனந்திரும்புகின்ற, உணர்வுள்ள உம்முடைய பிள்ளையாக வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 3:1