புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 22, 2024)

சந்தர்பங்களை தவறவிடாதிருங்கள்

ஏசாயா 55:6

கர்த்தரைக் கண்டடையத் தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.


ஆண்டவராகிய இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவனாகிய யூதாஸ், தன்னுடைய ஆண்டவராகிய இயேசுவை காட்டிக் கொடுக்கும்படி திரளான ஜனங்களோடு வந்தபோது, அவன்: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். அப்பொழுது ஆண்டவராகிய இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திரு க்கிறாய் என்றார். ஆனாலும் அவன் அந்த சந்தர்ப்பத்திலும், கயவர்க ளோடு தான் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி, ஆண்டவராகிய இயேசுவை முத்தமிட்டு காட்டிக் கொடுத்தான். ஏறத்தாழ மூன்றரை வருடங்களாக ஆண்டவரரோடு உணவுண்டவன், மனந்திருப் புதலைக் குறித்து பிரசங்கம் செய்தவன், மன்னிப்பைக் குறித்து நன்கு அறிந்திருந்தவன். ஆனாலும், அவன் ஆரம்பத்திலிருந்து தன் மனதை கடினப்படுத்துகின்றவனாவும், திரு டனாவும் இருந்தான் (யோவான் 12:6). கிடைக்கும் அருமையான சந்தர்ப்பங்களை பயன்படுத்தாமல், முடிவிலே வழி தெரியாமல், தன்னையே தான் மாய்த்துக் கொண்டான். இன்று, தங்களை விசவாச மார்க்கத்தார் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டம், ஒரு முறை மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்டால் போதும், அதன்பின்பு, எப்படியும் வாழ்ந்து கொள்ளலாம் என்று மனந்திரும்புதலையும் பரிசுத்தமாகுதலையும் குறித்து, தவறாக உபதேசித்து வருகின்றார்கள். இவர்கள் தங்கள் ஸ்தாபனங்களின் வாசல்களை விசாலமாக்குவதால், அநேகர் அந்த வாசல் வழியாக இலகுவாக நுழைந்து, துணிகரமாக பாவங்களை செய் கின் றார்கள். நீங்களோ, அவ்வண்ணமாக கர்த்தரை அறியவில்லை. யூதாஸ் ஆண்டவர் இயேசுவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு, அவருக்க பின்பாக சென்றவன். ஆனால், அவன் மனமோ அவரோடு இசைந்திருக்கவில்லை. எனவே நாம் பரிசுத்தமாகுதலை தேவ பயத்தோடே நாம் காத்துக் கொள்ள வேண்டும். நமுக்கு கிடைக்கும் முதலாவது சந்த ர்பத் திலே நல்ல அறிக்கை செய்து, மனந்திரும்பி, இயேசுவின் சாயலிலே வளர்ந்து பெருக வேண்டும். 'துன்மார்க்கன் தன் வழியையும், அக் கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.' துன்மார் க்கனுக்கு அத்தனை சிலாக்கியமென்றால், தேவ பிள்ளைகளாகிய நமக்கு பிதாவானர் இரங்காதிருப்பாரோ? நிச்சயம் இரக்கம் செய்வார்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, நான் உம்மோடு வாழும் வாழ்க்கையை மேன்மையாக கருதி, உம்முடைய வழியிலே நடக்கும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:13