புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 21, 2024)

உத்தம மனதுடையவர்களாயிருங்கள்

1 சாமுவேல் 15:22

பலியைப்பார்க்கிலும் கீழ்ப்ப டிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்.


சில விசுவாசிகளுடைய வாழ்க்ககையிலே, அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை தெட்டத் தெளிவாக அறிந்திருந்தும், தங்கள் சொந்த விரு ப்பங்களை நடத்தி முடிப்பதற்காக, தேவ வார்த்தைக்கு விரோதமாக பாவம் செய்த பின்பு, மனம்வருந்த மனதில்லாமல், 'நான் அதை நன்மை கருதியே செய்தேன், கர்த்தருக்காக அதை செய்தேன்' என்று சாட்டுப் போக்குகள் சொல்வதை கேட்டிருப்பீர்கள் அல்லது ஒரு வேளை கடந்த காலங்களிலே அப் படிப்பட்ட சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையிலும் நடந்திருக்கலாம். சவுல் என்னும் ராஜா அமலேக் கியருக்கெதிராக யுத்தத்திற்கு செல் லும் போது, அங்குள்ள யாவையும் அழித்துப்போடும்படி கர்த்தரிடத்திலிருந்து கட்டளையை பெற்றுக் கொண்டான். இரக்கமும், மனதுருக்கமும் நிறைந்த கர்த்தர் ஒரு காரி யத்தை அழித்துப் போடும்படி சொன்னால், அதற்கு தகுந்த காரண ங்கள் இருக்கும். ஒருவேளை தகுந்த காரணங்கள் எங்கள் அறிவுக்கு தெரியாவிடினும், கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிவதே நமக்கு நல மாக இருக்கும். ஆனால், சவுல் ராஜாவோ, யுத்தத்தில் வெற்றி பெற்று, ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமான வைக ளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழி த்து ப்போட மனதில்லாமல், அவைகளை இச்சித்து, தீட்டானவைகளை கொள் ளைப் பொருளாக கொண்டு வந்தான். தீர்க்கதரிசியாகிய சாமு வேலை அவனிடம் வந்தபோது, நான் கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றி னேன் என்றான். அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். அதற்கு சவுல்: ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவை களை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்ப டிக்குத் தப்ப வைத்தார்கள். அவன் ராஜாவாக இருந்தும், தன் இச்சை யை நிறைவே ற்றும்படி ஜனங்களை கர்த்தருடைய வார்த்தையின்படி நடப்பிக்க மன தில்லாமல், கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணிய பின்னரும், மனந்திரும்ப மனதில்லாமல், அதை 'உம்முடைய' தேவனுக்கே கொண்டு வந்தேன் என்றான். இப்படியாக குற்றங் குறைகளை அறிக்கை செய்ய கிடைக்கும் சந்தர்பங்களிலே, சிலரோ, தங்கள் பாவங்களோடு பொய் யையும் மாய்மாலத்தையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். நீங்க ளோ அப்படியிராமல் தேவனுக்கு முன்பாக நல்ல அறிக்கை செய்யுங்கள்.

ஜெபம்:

மனதுருக்கும் தேவானாகிய கர்த்தாவே, நான் உம்முடைய வார்த்தையை விட்டு தவறிவிட்டேன் என்று உணரும் போது, உம் சமுகத்திலே உண்மையை பேசும் உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:17