தியானம் (புரட்டாசி 19, 2024)
கிருபையை பொழிகின்ற தேவன்
சங்கீதம் 103:10
அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்க ட்டாமலும் இருக்கிறார்.
அந்நிய தேவர்களின் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக, வானத்திலிருந்து அக்கினியை வரவித்து, கர்த்தரே தேவன் என்று அறிந்து கொள்ளுங்கள் என்று பலத்த கிரியைகளை நடப்பித்த எலியா என்னும் மெய் தேவ னாகிய கர்த்தருடைய தீர்க்கதரியானவன், ஓரேப் பர்வத்த்திலே ஒரு கெபிக்குள்ளே போய் தங்கியிருந்தான். தன்னுடைய தாசனாகிய எலியா செய்த யாவற்றையும், தற்போது அவன் தன் பிராணனுக்கு பயந்து ஒளிந்திருப்பதையும் நன்கு அறிந்தி ருந்த தேவனாகிய கர்த்தர் எலி யாவை நோக்கி: இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம்? என்றார். கர்த்தருடையவர்கள் கர்த் தர்மேல் விசுவாசம் வைத்திருப்ப தால், அவர் முன்னிலையில் தேவ பயத்தோடு நடக்கின்றவர்கள். அவர்கள் மனுஷர்களுடைய மிரட்டல் களுக்கு அஞ்சாதவர்கள். ஆனால், எலியாவோ, ராஜாவாகிய ஆகாப் பின் மனைவி தன்னைக் கொன்று போடுவாள் என்று பயந்திருந்தான். கர்த்தர் அவனிடம் என்ன காரியம் என்று கேட்ட போது, அவன் தன் மனதை கர்த்தருக்கு மறைக்காமல், தன் மனதிலுள்ள பயங்கள் யாவற் றையும் அவருக்கு கூறினான். அப்பொழுது கர்த்தர், அவன் செய்ய வேண்டிய காரியங்களையும், இனி நடக்கவிருக்கும் சம்பவங்களையும் அவனுக்கு கூறி, தனக்கு பயந்து நடக்கின்ற ஏழாயிரம் பேரை தான் மிகுதியாக வைத்திருக்கின்றேன் என்று கூறி எலியாவை திடப்படுத்தி னார். ஆம், பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்கள் தேவ சமுகத்திலே ஜெபம் செய்யும் போது, உங்கள் உள்ளமதின் அழுத்தும் பாரங்களையும், பயங்களையும், தீர்க்தரிசியாகிய எலியாவைப் போல, உள்ளபடியயே கர்த்தருக்கு தெரியப்படுத்துங்கள். அவர் முன்னிலை யிலே பொய்களை பேசாமலும், சாட்டுப்போக்குகளை கூறாமலும், உங் கள் பெலவீனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். காலை தோறும் புதுக் கிருபை தரும் தேவனானவர், உங்களை பெலனத்தினால் இடைக்கட்டி, நீங்கள் செய்ய வேண்டியவைகiளா உங்களுக்கு கற்றுக் கொடுப்பார். உங்கள் பெலவீனத்திலே தம்முடைய கிருபை பூரணமாக விளங்கும்படி செய்வார். அவர் நம்முடைய தப்பிதங்களுக்கு தக்கதாக நீதியைச் சரிக் கட்டாமல், நம்மேல் மனதுருகும் இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனாக இருக்கின்றார்.
ஜெபம்:
என்னுடைய மீறுதல்களுக்கு தக்கதாக எனக்கு செய்யாமல் கிருபையை என்மேல் பொழியும் தேவனே, உம்முடைய சமுகத்திலே மனமேட்டிமை கொள்ளாமல் மனத்தாழ்மையோடு சேரும்படிக்கு என்னை வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 இராஜ 19:1-21