தியானம் (புரட்டாசி 18, 2024)
ஒருவனும் கெட்டுப்போகாமல்...
சங்கீதம் 51:17
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்ட தும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.
ஆபேல் கொடுத்த காணிக்கையை தேவனாவர் ஏற்றுக் கொண்டார். ஆனால், காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. அப்படியானால் தேவனிடத்தில் பட்சபாத உண்டோ? அப்படி யல்ல. தேவனிடத்தில் அநீதி இல்லை. தேவனிடத்தில் பட்சபாதமில்லை. (ரோமர் 9:14, 2:11). 'விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதி னாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கை களைக்குறித்து தேவனே சாட்சிகொ டுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்' என்று பரிசுத்த வேதா மம் கூறுகின்றது. காயீன் தன் மன தை பொல்லாங்கிலிருந்து மாற்றிக் கொண்டு, தேவனிடத்தின் தன்னை ஒப்புக் கொடுக்கும்படியாக சந்தர் பங்கள் உண்டாயிருந்தும், அவன் அவைகளை அசட்டை செய்தான். நம்முடைய தேவனாகிய கர்த்தர் தாமே, எக்காலத்திலும், மனந்திரும்பு கின்ற இருதயத்தை அவர் ஒருபோதும் புறக்கணித்ததில்லை, புறக்கணி ப்பதுமில்லை. ஒருவரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே அவருடைய அநாதி தீர்மானமாயிருக்கின்றது. ஒரு விசுவாசியானவன், தேவனுக்கு பிரியமில்லாத ஸ்தோத்திரபலிகளை செலுத்துகின்றான் என்றால், அவனுடைய வழிகள் தேவனுக்கு பிரியமா னவைகள் அல்ல. அது அவன் வாழ்வின் முடிவாக இருக்க வேண்டிய அவசியமுமல்ல. அவன் மனந்திரும்பி, தன் வழிகளை தேவனுக்கு ஒப்புக் கொடுத்து, தேவனிடத்தில் உதவியை கேட்கும் போது, அவர் அவனை ஏற்றுக் கொண்டு வழிநடத்த ஆயத்தமுள்ளவராகவே இருக்கி ன்றார். வேதத்திலே காணும் பாத்திரங்களிலே, தேவன் ஏற்றுக் கொள் ளாத பாத்திரங்களின் வாழ்க்கை ஆராய்ந்து பார்க்கும் போது, அவர்கள் வாழ்விலே தேவனையும், அவருடைய வார்த்தைகளையும் அசட்டை செய்து வாழும் மனந்திரும்பாத உணர்வற்ற இருதயம் அவர்களிடம் இருந்ததை காணலாம். நாமோ அப்படியிராமல், தேவன்மேல் நாம் கொண்டிருக்கும் விசுவாசத்தை அறிக்கையிட்டு, எந்த சூழ்நிலையிலும் அவரைப் பற்றிக் கொண்டும் வாழும் வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தை நம்மோடு பேசி, நம்மை கடிந்து கொள்ளும்போது, நாம் மனத்தாழ்மையோடு மனந்திரும்பி அவரிடத்தில் சேர்ந்து கொள்வோமாக.
ஜெபம்:
மனந்திரும்புகின்ற பாவியைத் அரவணனைத்து ஏற்றுக் கொள்ளு கின்ற தேவனே, உமக்கு பிரியமில்லாத காரியங்களை என் வாழ்விலிருந்து நான் அகற்றிப் போட உணர்வுள்ள இருதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - எபிரெயர் 11:4