தியானம் (புரட்டாசி 17, 2024)
தேவனுக்கு பிரியமானவைகள்
1 யோவான் 3:18
என் பிள்ளைகளே, வசனத்தி னாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்
காயீன், தான் கொடுத்த காணிக்கையை தேவனாகிய கர்த்தர் அங்கிகரிக்கவில்லை என்றும், தன் சகோதரனாகிய ஆபேலின் காணிக்ககையை அவர் ஏற்றுக் கொண்டார் என்றும் காயீன் அறிந்த போது, அதனிமித்தம் அவனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. அவன் முகநாடி ஏன் வேறுபட்டது என் பதை நன்றாக அறிந்திருந்த தேவனானவர் புறக்கணித்து தள்ளு ம்படிக் கல்ல, காயீன் தன் மனதில், தன் சகோதனைக் குறித்து கொண் டிக்கும் எரிச்சலானது, பெரும் பாத கத்திற்கு காயீனனை இட்டுச் செல் வதற்கு முன்னராக, அவன் உணர்வ டைய வேண்டும் என்றே அவனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறு பட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படு த்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். ஆனாலும், அவன் தேவனிடத்தின் அறிக்கை செய்ய மனதில் லாதவ னாய், தன் இருதயத்தை பொல்லாங்க ளுக்கு கொடுத்திரு ந்ததால், தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியை கள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததன் நிமித்தமே, தேவனுக்கு பிரிய மான காணிக்கையை செலுத்திய தன் சகோதராகிய ஆபேலை கொலை செய்தான் (1 யோவான் 3:12). அவன் அப்படிப்பட்ட பெரும் பாதகத்தை செய்தான் என்று அறிந்த பின்னரும், தேவனாகிய கர்த்தர் காயீ னை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள் விப்பட்ட விசேஷமாயிருக்கிறது என்று அப்போஸ்தலனாகிய யோவான், தேவனு டைய திட்டத்தை குறித்து மறுபடியும் வலியுறுத்தி கூறியிருக்கின்றார். தேவன் நம்மிடத்தில் கேள்விகளை கேட்கும் போது, நாம் பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனை ப்போலிருக்கக் கூடாது. மற்றவர்கள் தேவனுக்கு பிரியமான, சாட்சியான வாழ்க்கை வாழும் போது, அதைக் குறித்து நாம் ஒரு போதும் எரிச்சலடையாமல், நம்முடைய குறைகளை அறிந்து அவைகளை தேவனுக்கு முன்பாக அறிக்கiயிட்டு, அவைகளை விட்டுவிட்டு, தேவனுக்கு பிரியமானவை களை செய்ய கற்றுக் கொள்ளக் கடவோமாக.
ஜெபம்:
தம்முடைய பரிசுத்தமான வித்தை எனகுக்குள் தரித்திருக்கிற தேவனே, நான் மற்றவர்களுடைய நற்கிரியைகளைக் குறித்து எரிச்ச லடையாமல், உமக்கு பிரியமான வாழ்க்கை வாழ வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஆதி 4: 1-15