புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 16, 2024)

ஒளிந்து மறைந்து கொள்ளாதிருங்கள்

ஆதியாகமம் 3:9

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.


ஆதிப் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு கீழ்படியாமல், பிசாசானவனின் சத்ததிற்கு கீழ்படிந்து பாவம் செய்த போது, அவர்களுக்குள் குற்ற உணர்வு ஏற்பட்டது. அப் பொழுது பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவ னாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக் குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். நட ந்த சம்பவம் யாவற்றையும் அறிந்த தேவனானாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். ஆதாம் எங்கே இருக்கி ன்றான் என்றும், அவன் என்ன செய்தான் என்றும் அவர் நன்றாகவே அறிந்திருந்தார். ஆனாலும், அவன் உண்மையை பேசி, நல்ல அறிக்கை செய்ய வேண்டும் என்று அவனுக்கு ஒரு அருமையாக சந்தர்ப்பத்தைக் கொடுத்தார். ஆனால், பாவம் செய்யும் சுபாவம் அவனை ஆண்டு கொண்ட படியால், அவன் தன் பாவத்தை அறிக்கை செய்ய மனதில் லாமல், தன் செய்கையை நியாயப்படுத்தி, நீர் தந்த இந்த ஸ்திரி என்று முதலாவதாக தேவனையும், பின்பு தன் மனைவியையும் குற்றம் சாட்டினான். விசுவாசிகள் தங்கள் வாழ்விலே தவறும் நேரங்கள் உண்டு. அந்த வேளையிலே, தேவனுடைய சத்தம் முதலாவதாக சுத்த மனச் சாட்சியிலிருந்தும், பின்பு தேவன் ஏற்படுத்திய மனிதர்கள், முறைமைகள் வழியாகவும் தொனிக்கின்றது. அந்த வேளைகளிலே, சிலர் தங்கள் கிரியைகளை நியாயப்படுத்தும்படி சாட்டுப் போக்குகளை சொல்கின்றா ர்கள். வேறு சிலரோ, நான் அப்படி செய்யவில்லை, உங்களால் முடி ந்தால் இரண்டு சாட்சிகளை கொண்டு வாருங்கள் என்பார்கள். நாம்; அப்படியாக சந்தர்பத்திகு தப்பிக் கொள்கின்றவர்களாவும், விதண்டா வாதம் செய்கின்றவர்களாகவும் இல்லாதபடிக்கு, தேவனுக்கு முன்பாக நம்முடைய சுத்த மனசாட்சியை உணர்வுள்ளதாக காத்துக் கொள்ளும் படிக்கு நல்ல அறிக்கை செய்கின்றவர்களாக காணப்பட வேண்டும். இது மற்றவர்களுடைய அழுத்த்தினால் உண்டாகாமல், நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து மனதார, தேவனிடத்திலும், சம்பந்தப்பட்ட மனிதர்களிடத்திலும் நல்ல அறிக்கை செய்து தேவனுடைய இரக்கத்தை பெற்றுக் கொள்ளுகின்ற கீழ்படிவுள்ள பிள்ளைகளாக காணப்பட வேண்டும். தேவன் மன்னிக்க தயை பெருத்தவராயிருக்கின்றார்.

ஜெபம்:

நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமல் இருக்கின்ற பரலோக தகப்பனே, நான் எப்போதும் உம்முடைய சத்தத்தை கேட்டு, அதற்கு கீழ்படிக்கின்ற உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 51:17