தியானம் (புரட்டாசி 15, 2024)
நல்ல அறிக்கை செய்யுங்கள்
நீதிமொழிகள் 28:13
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.
மாலை வேளையிலே நண்பர்களோடு சேர்ந்து படிக்கப் போகின்றேன் என்று சென்ற மகனானவனொருவன், தன் நண்பர்களோடு சேர்ந்து திரை ப்பட அரங்கிற்கு சென்று, திரைப்படத்தை பார்த்து, பின்பு அவர்களோடு உல்லாசமாக நேரத்தை கழித்துக் கொண்டிருந்தான். அவன் வீடு திரும்புவதற்கு முன்னதாகவே, அவன் அன்று நண்பர்களோடு சேர்ந்து நட ப்பித்த காரியங்கள் யாவையும் அவன் தகப்பனானவர் அறிந்து, அவன் படிக் கச் சென்ற வீட்டிற்கு சென்று, அவன் அங்கே இல்லையென்பதையும் உறுதி செய்து கொண்டார். இராத்திரியிலே, தன் பாடப் புத்தகங்களோடு வீடு திரு ம்பிய மகனானவை அழைத்து, நீ எங்கிருந்து வருகின்றாய் என்று அவ னோடு வழமையாக பேசுகின்றதை போல அமைதலாக தொனியிலே கேட் டார். அதற்கு மகனானவன் நண்பன் வீட்டிலிருந்து பாடங்களை படித் தேன் என்றான். அதற்கு தகப்பனானவர்: நண்பனுடைய வீட்டில் திரை யரங்கு இருக்கின்றதோ என்று கேட்டார். தகப்பனானவர் காரியத்தை அறிந்திருக்கின்றார் என்று அறிந்த பின்பும், அவன் அவரை நோக்கி: நீங்கள் என்னை நம்பாமல் எனக்கு பின்னாக வருகின்றீர்களோ என்று கேட்டுக் கொண்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, நம்முடைய பரம பிதா யாவற்றையும் அறிந்திருக்கின்றார். அவருக்கு மறைவான காரி யம் ஒன்றுமில்லை. 'உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போ வேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத் திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட் டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கி னாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.' என்று சர்வ வல்லமை யுள்ள நம் தேவனைக் குறித்து, ஒரு தேவ பக்தன் பாடியிருக்கின்றார். ஆனால், மனிதர்கள் தங்கள் குற்றங் குறைகளை அறிக்கை பண்ணும் பொருட்டு அவர்களுக்கு ஒரு சந்தர்பத்தை கொடுக்கும்படி, அவர் 'நீ என்ன செய்தாய், எங்கிருந்து வருகின்றாய்' என்று கேட்கின்றார். அவர் கேட்கும் வேளையிலே, அவர் பாதத்திலே உங்களை தாழ்த்தி, இரக்க த்தை பெற்றுக் கொள்ளும்படிக்கு, உங்கள் குற்றங் குறைகளை அவரிட த்தில் அறிக்கை செய்யுங்கள்.
ஜெபம்:
தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக் குப் பயந்தவர்களுக்கு இரங்குகிற பரம தந்தையே, நான் உம்முடைய சமுகத்திலே துணிகரம் கொள்ளாதபடிக்கு என்னை வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங் 139:17