புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2024)

வெளியே துரத்திவிடப்பட வேண்டியவைகள்

எபேசியர் 4:31

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது.


ஒரு கிராமதிலே வாழ்ந்து வந்த பண்ணை சொந்தக் காரனொருவன், சில மரங்களை வெட்டி தடிகளை எடுக்கும்படிக்கு காட்டுப் பகுதியான இடத்திற்கு சென்று கொண்டிருந்தான். அங்கே ஒரு நாய் குட்டியொன்று தனியாக விடப்பட்டு, சத்தம் போட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு பரிதாப்பட்ட அந்த பண்ணையின் சொந்தக்காரன், அதை எடுத்து, தன் பண்ணைக்கு கொண்டு வந்து மாட்டு பால் கொடுத்து அதை பராமரித்து வந்தான். சில கிழமைகள் சென்ற பின்பு, அது நாய் குட்டியல்ல, அது ஒநாயின் குட்டியென்று அறிந்து கொண்டான். பார்வைக்கு அது மிக வும் அழகானதாகவும், குடும்பத்தா ரோடு அது செல்லமாகவும் பழக்கிக் கொண்டதால், அதை வீட்டிற்கு தகு ந்து வண்ணமாக பயிற்சி செய்து வளர்ப்போம் என் தன் வீட்டிலே வளர் த்து வந்தான். அந்த ஓநாயும், செல் லப் பிராணி போல வீட்டிலே வளர்ந்து வந்தது. ஒரு நாள் அந்த ஓநாய் க்கு ஆகாரம் போடப் பிந்தியதால், அது வீட்டிலே மேய்ந்த கோழி குஞ்சொன்றை கடித்து விட்டது. அதை அறிந்து பண்ணைச் சொந்தக் காரன், அதற்கு நேரத்திற்கு சாப்படாடு போடாதது, எங்களுடைய பிழை என்று இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்றான். சில நாட்கள் சென்ற பின்பு, பண்ணையிலிருந்த சில ஆடுகளை கடித்து காயப்படுத்த ஆரம்பித்தது. அதையும் பொருட்படுத்தாமல் விட்டுவிட்;டா ர்கள். காலப்போக்கிலே, ஒருநாள் அந்த ஓநாய் அவனுடைய குமார ர்களில் ஒருவனை கடித்து விட்டபின்பு அவன் உணர்வடைந்தான். தன் பண்ணை கதவை திறந்து, அந்த ஓநாய் இருக்க வேண்டிய இடத்திற்கு அதை அனுப்பி விட்டான். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த உலகிலே காணப்படும் அநேக காரியங்கள், ஆரம்பத்திலே புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சி க்கப்பட த்தக்கதாயும் காணப்படும். ஆனால் அவைகள் குடிகொள்ள வேண்டிய இடம் நிச்சயமாக நம்முடைய இருதயம் அல்ல. ஆனாலும், அவைகளை இச்சிக்கின்றவர்கள், அவைகளால் உருவக் குத்தப்பட்டு வேதனையடைகின்றார்கள். வேதனை அடைகின்ற வேளையிலும், இதயக் கதவை திறந்து அவைகளை வெளியேற்றுவதற்கு பதிலாக, அவைகள் கட்டிக் காத்துக் கொள்வதற்கு வழிகளை தேடுகின்றார்கள். நீங்களோ, உலகத்துக் குரியவைகளை, உங்கள் இருதயத்தில் இருத்து அகற்றி, அவை இருக்க வேண்டிய இடத்தில் விட்டுவிடுங்கள்.

ஜெபம்:

தேவ ஆலயமாக கட்டப்பட்டு வரும்படி என்னை அழைத்த தேவனே, பரிசுத்தமான அந்த ஆலயத்திற்கு புறம்மே இருக்க வேண்டியவைகளை நான் உள்ளே தக்க வைக்காதபடிக்கு என்னை வழிநடத்துவீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:8