தியானம் (புரட்டாசி 13, 2024)
பூட்டப்படாத கதவுகள்
நீதிமொழிகள் 12:15
மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞான முள்ளவன்.
ஒரு பட்டணத்திலிருந்து கிராமமொன்றிற்கு புதிதாக வந்து குடியேறிய மனிதனொருவன், அவன் வாங்கிய வீட்டையும் நிலத்தையும் சுற்றி நேர் த்தியாக வேலியடைத்து, வீட்டின் முன்புறத்திலே தூண்களை எழுப்பி, பெலமான வெளிக் கதவைப் போட்டான். தன் காணியிலே சில தென் னம்பிள்ளைகளையும், வேறு சில கனி தரும் மரங்களையும் நட்டு, பராம ரித்து வந்தான். ஆனால், அவன் முற்பு றத்திலே அவன் போட்ட, தெருவிற்கு செல்லும் வெளிக்க தவை அவ்வப்போது பூட்டுவதற்கு மறந்து போய்விடுவான். அவனு டைய அயலிலே வாழ்ந்து வந்த சிலர், அவனை நோக்கி, நீங்கள் அந்தக் கதவை பூட்ட மறந்து போய் விடுகின்றீர்கள். நீங்கள் நன்றாக பராமரித்து வரும் தென்னம்பிள்ளைகளையும், மற்றய மரங்களையும் மாடு கள் மேய்ந்து விடும் என்று கூறினார்கள். எத்தனையோ நாட்கள் கதவு திறந்து கிடந்தது, ஒன்றுமே நடக்கவில்லை என்று அவர்களுடைய வார் த்தைகளை அவன் பொருட்படுத்தாது போய்விட்டான். ஆனால், ஒரு நாள் அயலவர்கள் கூறியது போல, அவ்வழியாக வந்த மாடுகள் உள்ளே சென்று மரங்கள் யாவற்றையும் மேய்ந்து விட்டு சென்று விட்டது. அந்த அயலவர்கள் கூறிய ஆலோசனை பெரிதான வெளிப்பாடுமல்ல. அதை அந்த மனிதனனானவன் செய்வதற்கு அந்த ஆலோசனைகள் கடின மாக காரியமுமல்ல. ஆனாலும், அசட்டை செய்யும் மனநிலையினால், அவன் பிரயாசம் யாவும் வீணாய் போய்விட்டது. பிரியமான சகோதர சகோதரிகளே, சிலர் இன்று இந்த தியானத்தைக்கூட அற்பமாக எண்ணி, வேததத்தில் ஆழமான காரியங்களை அறிய வேண்டும் என்று இலகு வானதும், எளிதாக புரிந்து கொள்ளக்கூடியதுமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைகளை அசட்டை செய்து விடலாம். நாம் இந்த உலகத்திலே வாழ்ந்தாலும், நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலே, நாம் பூட்டி வைக்க வேண்டிய கதவுகள் உண்டு. நம்முடைய சிந்தையை உலகத்திற்கும் உலக காரியங்களுக்கும் திறந்து வைக்காமல், வேத வார்த்தைகளின் தியானித்திற்கே எப்போதும் திறந்து வைக்க வேண்டும். வீட்டிலே பூட்டப்படாத கதவுகள் வழியாக கள்வர்கள் உள்நுழைவது போல, நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும், தேவனுக்கு, விரோதமான சிந்தனைகள் உள்நுழையாதபடிக்கும், தேவனை அறிகின்ற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் காத்துக் கொள்வோமாக.
ஜெபம்:
என் மேல் உம் கண்களை வைத்து ஆலோசனை தரும் தேவனே, உம்முடைய ஆலோசனைகளை நான் அற்பமாக எண்ணாமல், ஞானமுள்ளவனாக நடந்து கொள்ள உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 10:4-5