தியானம் (புரட்டாசி 12, 2024)
உங்கள் விடுதலை சமீபமாக இருக்கின்றது
உபாகமம் 30:14
நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்தி லும் இருக்கிறது.
ஒரு மனிதனானவன், தன் சரீரத்திலே சிறிதாக ஏற்பட்ட நோவானது, அதிகரித்துக் கொண்டு போனதினாலே, அதிலிருந்து எப்படியாகவது சுகமடையம்படிக்கு, பெருந் தொiயான பணத்தை செலவு செய்வு, கடல் கடந்து சென்று, உலகிலே அதி சிறந்த வைத்தியரை சந்தித்து, அதற்குரிய மருந்துகளைளும், பயிற்சி முறைகளைளும், உண்ண வேண் டிய உணவுகளைளும், வாழ்வி லே தவிரக்க வேண்டிய காரிய ங்களையும் கேட்டு பெற்றுக் கொண்டு, தன் ஊருக்கு திரும்பி அவைகளை கடைப்பிடிக்கும்ப டி க்கு மிகவும் பிரயாசப்பட்டான். ஒரு விசுவாசியின் வாழ்விலே ஆன்மீக நோய் ஏற்படும் போது அவன் என்ன செய்ய வேண்டும்? பெருந்தொகையான காணிக்கை களோடு பிரமுகர்களை சந்திக்க, கடல் கடந்து செல்ல வேண்டுமோ? அத்தகைவர்களை சந்திக்க எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். 'நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல. நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல என்று தேவானகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். மனிதர்கள் தங்கள் கிரியைகளினாலே விடுத லையடைய முடியாதபடி பாவ இருளிலே அகப்பட்டிருந்ததால், அன்பு ள்ள பிதாவாகிய தேவன் தாமே, தம்முடைய ஒரே பேறான குமார னாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பி, அவர் வழி யாக, பாவ கட்டுகளிலிருந்து மனிதர்கள் விடுதலையடையும் வழியை உண்டாக்கினார். விலை மதிக்க முடியாத அந்த விடுதலையை, அவர் இலவசமாக நமக்கு கொடுத்திருக்கின்றார். அதை பணம் கொடுத்து வாங்குவதற்கு அது விற்பனைப் பொருளல்ல. உங்கள் அறைக் கதவை பூட்டிக் கொண்டு, உங்கள் இதயக் கதவை கர்த்தருக்கு திறந்து விடு ங்கள். அவர் சமுகத்திலே மனம்பொருந்த அவருடைய வார்த்தைக்கு கீழ்படியுங்கள். சத்திய ஆவியானவர் உங்களை நடத்திச் செல்வார்.
ஜெபம்:
என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்த தேவனே, உம் வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் உணர்வுள்ள உள்ளத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யாக் 4:7-10