புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 11, 2024)

ஆறாத காயங்கள் மாறாத புண்கள்

1 யோவான் 1:7

அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.


'இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை. அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரண முமுள்ளது. அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெ யினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.' என்று உணர்வற்ற வாழ்க்கை வாழும் தம்முடைய ஜனத்திற்கு, கர்த்தர் கூறியிருக்கின்றார். ஏன் உங் களுடைய சரீரத்திலுள்ள புண்கள் மனைந்து சீழ் பிடிப்பதற்கு இடம் கொடுக்க வேண்டும்? வைத்தியரிடம் போனால் அவர் அதற்குரிய வைத் தியத்தை செய்து சுகப்படுத்துவார் அல்லவோ. ஏன் உங்களுடைய மன ப்புண்கள், ஆற்றப்படாமல் இருக்க வேண்டும்? கசப்பு, வன்மம், வைராக்கியம், பகை, எரிச்சல் இவைகள் தங்குவதற்கு உங்கள் மனதை வீடாக்கிக் கொடுகின்றீர்களா? அவை சீக்கிரமான பெருகி, உங்கள் மனதை கற்பாறையைப் போல கடினப்ப டுத்திக் போடும். உங்கள் நிம்மதியான வாழ்க்கைக்கு, நீங்கள் படும் பிரயாசங்களை அவை வீணாக்கி, உங்கள் வாழ்க்கைiயும், உங்களை சூழ இருக்கும் அநேக ருடைய வாழ்க்கையையும் அவை பாழக்கிப் போடும் என்பதை அறியாதிருக்கின்றீர்களா? அவைகள் நோய்யைப் போல பற்றிக் கொண்டு, நோவைப் பெருக்கப் பண்ணும். பிரியமான வர்களே, மனப் புண்களை ஆற்றும் பரம வைத்தியர் உங்களுக்கு அரு கிலிருப்பதை சீக்கிரமாய் மறந்து போனீர்களா? மனநோய்களினாலே நீங்கள் சற்றேனும் அழிந்து போகும்படிக்கல்ல, அவைகளிலிருந்து நீங்கள் முற்றாக குணமடைந்து, சுக வாழ்வு வாழும்படிக்கு கர்த்தர் உங்களை அன்போடு அழைக்கின்றார். 'உங்கள் பாவங்கள் சிவேரெ ன்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத் தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.' என்று கூறியி ருக்கின்றார். அந்த மேலான நன்மையை உங்கள் வாழ்விலே நீங்கள் கண்டடையும்படிக்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன? அவர் சமுகத்திலே மனம்பொருந்தி அவருடைய வார்த்தைக்கு கீழ்படியுங்கள். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்க ளையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது.

ஜெபம்:

ஆறாத காயங்கள் ஆற்றுகின்ற தேவனே, மாம்சத்தின் கிரியைகளின் இல்லமாக என் உள்ளத்தை நான் மாற்றிவிடாதபடிக்கு, எப்போதும் உமக்கு முன்பாக பாவங்களை அறிக்கையிட்டு விட்டுவிட வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 30:2