புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 10, 2024)

தேறினவர்களாகும்படிக்கு...

1 யோவான் 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயி ருக்கிறார்.


ஆரம்ப பிரிவிலே பாடம் கற்று வரும் மாணவனொருவன், தன் வகுபிலுள்ள வேறொரு மாணவனுடைய பொருளொன்றை களவாக எடுத்து விட்டு, தான் அதை எடுக்கவில்லை என்று பொய் சொல்லி விட்டான். அதை அறிந்த வகுப்பாசியர், நடந்த சம்பவத்தை ஆராய்ந்து உறுதி செய்த பின்பு, பாடாசாலையின் விதிமுறைகளின் படி அவனைத் தண்டித்தார். அந்த மாணவனுடைய பெற்றோர், வகுப்பாசியரை சந்தி த்து அவரோடு பேசினார்கள். நடந்தது உண்மை ஆனால், சக மாணவர்களுக்கு முன்பாக அவனை அவமானப்படுத்தாமல், காரியத்தை அப்படியே விட்டு விடுங்கள் என்று தயவாக கேட் டுக் கொண்டார்கள். அதற்கு அந்த ஆசிரியர் பெற்றோரை நோக்கி: உங்கள் மகனானவன், ஒரு சில மாணர்களுக்கு முன் அவ மானமடைவதையோ அல்லது அவன் இப்படியே வளர்ந்து தேசம் முழுவதிலுமுள்ளவர்களுக்கு முன்பாக அவமானமடைந்து சிறை க்கு செல்வதையோ விருப்புகின்றீர்கள்? பாருங்கள், எந்த மாணவனை யும் அவமானப்படுத்துவது என்னுடைய நோக்கமல்ல. ஆனால், அவர் கள் ஆளுமையிலே வளர்ந்து தேற வேண்டும். அவர்கள் பெலவீனங்கள் அவர்களுக்குள் வேர்விட்டு வளரமுன்பதாக, அதை முளையிலே கிள்ளி விட வேண்டும். குற்றங்களை ஏற்றுக் கொண்டு, மனம் வருந்த பழகிக் கொள்ள வேண்டும். குற்றங்களை செய்தால் பின்விளைவுகளும், அவ மானங்களும், தண்டனைகளும் உண்டு என்பதை எல்லா மாணவர்களும் ஆரம்பத்திலிருந்தே அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு தயவாக ஆலோசனை கூறினார். பிரியமான சகோதர சகோதரிகளே, நீங்களோ அல்லது உங்கள் பிள்ளைகளோ ஒரு சில விசுவாசிகளுக்கு முன் அவமானமடைவதையோ அல்லது கர்த்தருடைய நாளிலே அவரு க்கு முன்பாக அவமானமடைவதையோ விருப்புகின்றீர்கள்? சற்று சிந்தி த்துப் பாருங்கள். உங்கள் மனம் மனந்திருப்புதலைக் குறித்து உணர்வு ற்றுப் போக முன்னதாக, வேதனை உண்டாக்கும் வழிகள், ஆரம்பத் திலேயே, அவைகள் முளைத்தெழும்பி வேர் விடுவதற்கு முன்னதாக, தேவனிடத்திலே அறிக்கையுங்கள். அவர் எல்லாப் பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய நாளிலே உம்மால் அறியப்படாத அந்நியனாக உமது சந்நிதானத்திலே நிற்காதபடிக்கு, எனக்கு கொடுக்கப்ப ட்ட அருமையான நாட்களை பிரயோஜனப்பத்திக் கொள்ள கிருபை செய் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:21-27