தியானம் (புரட்டாசி 09, 2024)
'அறிகுறி வெளிப்படாத நோய்கள்'
2 பேதுரு 3:14
கறையற்றவர்களும் பிழை யில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கி ரதையாயிருங்கள்.
ஒரு சில நோய்களின் அறிகுறிகள் வெளிப்படாது மறைந்திருக்கின்றது. ஆனால், அத்தகைய நோய்கள் வெளிப்படும் போது, அதன் பின் விளைவுகள் பராதூரமானதாகவும், குணப்படுத்துவதற்கு காலம் கடந்த தாகவும் மாறிவிடுகின்றது. அதுபோலவே, விசுவாசிகளின் ஆவிக்குரிய வாழ்விலும், சில நோய்கள் மற்றவர்களுக்கு வெளிப்படாமல் மறைந்தி ருக்கின்றதாயும் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றதாயும் இரு ந்து விடுகின்றது. சில வேளைக ளிலே சில விசுவாச மார்க்கத்தா ருடைய வாழ்க்கையானது 'வெளி யில் ஒரு கோலமும், ஆலயத்திலே வேறு கோலமுமாக' இருந்து விடு கின்றது. உண்மை வெளிப்படும் நாளிலே, அவரவருடைய வாழ் விலே பெரும் அவமானமும், நிந் தையும் ஏற்படுகின்றது. சில விசு வாசிகள் தங்கள் ஆவிக்குரிய நோய்களை அல்லது நோய்களுக்கு இட் டுச் செல்லும் வழிகள் மறைத்து, ஒளித்து, இரகசியமாக வைத்திருக்கி ன்றார்கள். அப்படியாக அவர்கள் யாருக்கு மறைத்து வைக்கின்றார்கள்? தேவனுக்கோ அல்லது மனிதர்களுக்கோ? நிச்சயமாக தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லையென்று அவர்கள் திட்டமாக அறிந்திருக்கின் றார்கள். அப்படியானால் ஏன் அவர்கள் மனிதர்களுக்கோ சக விசு வாசிகளுக்கோ மறைக்கின்றார்கள்? ஏனெனில், கர்த்தருடைய நாளிலே கர்த்தருக்கு முன்பாக வெட்கப்பட்டாலும், மனிதர்களுக்கு முன்பாக வெட்கப்படக் கூடாது என்று மற்றய மனிதர்களுக்காக வாழ்வதை தங்கள் வாழ்விலே முதன்மைப் படுத்திக் கொள்கின்றார்கள். பிரியமான வர்களே, சில வேளைகளிலே மறைவாக பாவங்களை விட்டு விலகுவ தற்குகென்று சிலரிடம் ஆலோசனை கேட்டால், அவர்கள், அதை பல ரிடம் கூறி, உங்களை நியாயந்தீர்த்து விடும் சந்தர்ப்பங்கள் இருந்திரு க்கலாம். அதற்குரிய பலனை அவர்கள் அடைவார்கள். அதனால், ஒரு வரும் மறைவாக பாவங்களோடு தொடர்ந்து வாழ்ந்து விடுவது நல்லது என்று கூற முடியுமாக? கர்த்தருடைய நாளிலே கறை திறையற்ற மண வாட்டியாக அவர் முன்னிலையிலே நிற்கத்தக்கதாக, இந்த நாளிலே, மனதில் மறைந்திருப்பதை கர்த்தராகிய இயேசுவிடம் உண்மை மனதோடு தெரியப்படுத்துங்கள். அனுதினமும் வேதத்தை தியானித்து, ஜெபம் செய்யுங்கள், தேவ ஆவியானவர்தாமே நீங்கள் செய்ய வேண் டியவைகளை உங்களுக்கு வெளிப்படுத்தி, உங்களை சகல சத்திய த்திலும் வழிநடத்திச் செல்வார்.
ஜெபம்:
அன்பின் தேவனே, சரீரத்தை மாத்திரம் அழிக்க வல்லவர்களுக்கு பயப்படாமல், ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவராகிய உமக்கே பயந்து நடக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 10:28