புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 08, 2024)

குறைவிலே தரித்து நிற்காதிருங்கள்

தீத்து 1:16

அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது


பொதுவாக, ஒவ்வொரு நோய்களும் வெளிப்படையான சில அறிகுறிகள் இருப்பதுபோல, மனிதர்களுடைய வாழ்க்கையிலும், அவர்கள் வாழ்வின் நிலைமைகளை குறித்த அறிகுறிகளையும் காணமுடியும். எடுத்துக்காட்டாக, பொதுவாக, படிக்க விருப்பமில்லாத மாணவனின் வாழ்க்கையிலே காணப்படும் வெளிப்படையான அறிகுறிகள் என்ன? பாடசாலைக்கு ஒழுங்காக செல்ல விருப்பமில்லை ஆதலால், பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களையும், வகுப்பிலு ள்ள சக மாணவர்களின் நடத்தைகளைக் குறித்த விமர்சனங்கள் உண்டாகும். பாடசாலை அதிபரைக் குறித்த குறைகள் பேசப்படும்.இவைகளை நாம் யாவரும் நன்கு அறிந்திருக்கின்றோம், அநேகர் அவ்வழியாய் கடந்து வந்திருக்கி ன்றோம். நூற்றுக் கணக்கான மாணவர்களையும் அநேக ஆசிரியர்களைக் கொண்டதும், ஒருபோதும் ஒரு பிரச்சனைகள் நடக்காத ஒரு சம்பூரண மான பாடசாலையை இந்த உலகிலே காணக்கூடுமோ? படிக்க மனதில் லாத மாணவனை எந்த பாடசாலையிலே சேர்த்துவிட்டாலும், அவன் கண்களுக்கு முன்பாக அங்குள்ள குறைகளே தெளிவாக தெரியும். அப்படிப்பட்ட மாணவனிடம், நீ தேசத்திலுள்ள எந்தப் பாடசாலைக்கு செல்ல விருப்புகின்றாய் என்று கேட்டால், அவன் வாயிலிருந்து சரியான பதிலை காண்பது அரிதாகவே இருக்கும். பாடசாலைக்கு செல்கின்றவர்கள் எல்லோரும் படித்து பட்டம் பெறுகின்றார்களா என்று அவன் கூறிக் கொள்வான். அதுபோலவே, தேவ ஆலோசனையை விரும்பாதவர்களும், தங்களை விசுவாசமார்க்கத்தார் என்று கூறிக் கொள்கின்றவர்களின் வாழ்விலே, பொதுவாக காணப்படும் அறிகுறிகள் என்ன? முதலாவதாக, அவர்கள் சபை கூடிவருதலைக் விட்டுவிட்டு, சபையையும், போதகர்களையும், விசுவாசிகளையும் குறித்து விமர்சித்துக் கொள்வார்கள். அப்படியானால் நீ எந்த சபைக்கு செல்லப் போகின்றாய் என்று கேட்டால், சபைக்கு செல்கின்றவர்கள் எல்லோரும் பர லோகம் போய்விடுவார்களா என்று கூறுவார்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, விழிப்புள்ளவர்களாக இருங்கள். காலத்தை விரையப்படு த்தாமல், அருமையான நாட்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுங்கள். குறைவு நிறைந்த இந்த உலகத்திலே, குறைகளை மட்டுமே காண்கின்றர்களின், புத்தியும் மனசாட்சியும் அசுத்தமதாயிருப்பதால், அவர்கள் குறைகளிலே தரித்து நின்று விடுகின்றார்கள். பரிசுத்தத்தை நாடுகின்றவர்கள், பரிசுத்தத்திலே வளர்ந்து பெருகின்றார்கள்.

ஜெபம்:

கோணலும் மாறுபாடான உலகத்திலே பரிசுத்த வாழ்க்கை வாழ என்னை வேறு பிரித்த தேவனே, வேதத்தின் தியானத்திலும், ஜெபத்திலும் அனுதினம் நான் வளரும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 22:11-12