புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 07, 2024)

போதகத்தை ஏற்றுக் கொள்ளாத மனம்

மத்தேயு 15:13

என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த போதகரொருவர், அந்த ஊரிலே, கர்த்தரை அறிந்தும், ஊதாரித்தனமாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனொருவனை சந்தித்து, அவனை நோக்கி: மகனே, நீ ஆண்டவர் இயேசு காட்டிய உண்மையின் வழியை அறிந்தும், உனக்கு கிடைத்த அருமையான காலத்தை குடித்து வெறித்து இப்படியாக நீ வீணாக்கி, உன் வாழ் க்கையை பாழாக்கிக் கொள்கின்றாயே என்று கேட்டார்? அதற்கு அவன் மறுமொழியாக: போதகர் ஐயா, ஆண்டவர் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட நல்ல கள்வனைப் போல, நான் மரிக்கும் தறுவாயில் மனந்திரும்பி விடுவேன் என்றான். இப்படியான மனிதர்களை நீங்க ளும் உங்கள் வாழ்வில் சந்தித்தி ருப்பீர்கள். இவர்கள் தாங்கள் போகின்ற வழி தவறானது என்று அறிந்திருக்கின்றார்கள். மனந்தி ரும்ப வேண்டிய அவசியத்தையும் நன்றாக புரிந்திருக்கின்றார் கள். ஆனாலும், இவர்கள் எப்போதும் தங்கள் ஆசை இச்சைகளை நிறை வேற்றும்படிக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளிலிருந்து தப்பிக் கொள்ளும்படி க்கு, வேதத்திலே காணும் சில தனித்துவமான சம்பவங்களை முழு மையான விளங்கிக் கொள்ளாமல், அவைகளை தங்கள் துர்குணத்திற்கு ஏற்றதாக புரட்டிக் கொள்கின்றார்கள். இவர்கள் வேத வார்த்தைகள் நித்திய ஜீவனுக்கென்று கொடுக்கப்பட்டதை மறந்து, விதண்டாவதங்களுக்கு ரியதாக மாற்றிக் கொள்கின்றார்கள். ஞாயிறு ஆராதனைக்கு தவறால் போ என்று கூறினால், அப்படியானால் 'நோய்வாய் பட்டு கட்டில் கிடை யாய் கிடக்கின்றவன் பரலோகம் செல்ல மாட்டானோ' என்பார்கள். மது பான வெறி கொள்ளுதலை பற்றி கூறினால், 'வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது. வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷ னைத் தீட்டுப்படுத்தும்' என்றும், திரைப்படங்களை பார்த்து நெறிகெட்டு உலகப்போக்கிற்குள் போய்விடாதே என்று கூறினால், 'சினிமா திரைப் படங்களை பார்க்க வேண்டாம்' என்று வேதம் கூறுகின்றதா என்பார்கள். தங்கள் அலங்கோலமான நடை உடைகளை பற்றி யாரும் கூறினால், தேவன் வெளிதோற்றத்தையல்ல, இருதயத்தையே பார்கின்றார் என்பார் கள். பிரியமானர்களே, இப்படிப்பட்டவர்கள், இணங்காதவர்கள், இட றலடைகின்றவர்களும், இடறலடையப்பண்ணுகின்றவர்களுகமாயிருப்ப வர்கள். பரம பிதா நடாத நாற்றுகள் எல்லாம் பிடுங்கப்ப டும் என்று ஆண்டவர் இயேசு கூறியிருகின்றார். எனவே, உங்கள் நாட் களை இப்பபடிப்பட்டவர்களோடு விரயப்படுத்தாமல், போதகத்தை மனத்தாழ் மையோடு ஏற்றுக் கொண்டு, தேவனுக்கு கீழ்படியுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நித்திய ஜீவனுக்கென்று நீர் விளம்பிய வேதத்தின் மகத்துவதை நான் உணர்ந்தவனாக, உம்முடைய வார்த்தைகளின் வழியிலே வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழி நடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 தீமோ 3:1-9