தியானம் (புரட்டாசி 06, 2024)
மனதின் உண்மையான வாஞ்சைகள்
உபாகமம் 4:40
நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும்
ஒரு பெற்றோரானவர்கள், மாலை வேளைகளிலே, தங்கள் மகனானவனை, சின்ன வயதிலிருந்தே வீட்டின் அருகிலுள்ள பூங்காவிற்கு அழைத்து சென்று அங்கே அவ்வப்போது நேரத்தை கழித்து வந்தார்கள். பூங்காவை விட்டு வெளியேறும் போது, தாங்கள் இருந்த இடத்தையம் சுத்தப்படுத்தி, மிகுதியாக இருக்கும் சிற்றுண்டி துணிகளைகளையும், குளிர்பான போத்தல்களையும், எடுத்தச் சென்று குப்பைத்தொட்டியிலே தவறாமல் போட்டு விடுவது அவர்களு டைய வழக்கமாக இருந்தது. சில ஆண் கள் கடந்து சென்ற பின்பு, ஒருநாள், மாலை வேளையிலே அவர்கள், சீக்கரமாக பூங்கவைவிட்டு செல்ல வேண்டியிருந்ததால், துரிதாமாக அவர்கள் இருந்த இடத்தை சுத்தப்படுத்திய பின்பு, தகப்பனானவர் தன் மகனின் கையைப் பிடித்துக் கொண்டு அவ் விடத்தைவிட்டு போகும் போது, அங்கே சில உணவுப் பைகள், கீழே விழுந்து கிடந்ததை கண்ட மகனானவன், தகப்பனானவரின் கையை உதறிவிட்டு, ஓடிச் சென்று, அந்தப் பைகளை எடுத்து, குப்பத் தொட்டி யிலே போட்டுவிட்டு, மறுபடியும் தகப்பனானவரின் கையை பிடித்துக் கொண்டான். பெற்றோர் தங்கள் வாழ்வில் எதை இயல்பாகவே முதன் மைப்படுத்திக் கொள்கின்றார்களோ, அதை பிள்ளைகளும் இயல்பா கவே முதன்மைப் படுத்திக் கொள்கின்றார்கள். முதலாவது தேவனு டைய ராஜ்யத்தையும் நீதியையும் மனதார உண்மையாக தேடும் பெற்றோர், அதன் மேன்மையை அறிந்திருப்பதினால், பிள்ளைகளும் அந்த மேன் மையை அடைய வேண்டும் என்று தங்கள் கிரியைகள் வழியாக பிள் ளைளுக்கு கற்றுக் கொடுப்பார்கள். சில பெற்றோர், வெளிவேடமாக ஆலயத்திற்கு சென்று கொண்டு, தங்கள் வாழ்வில் கல்வியைiயும், வேலையையும் முதன்மைப் படுத்தி வந்தால், பொதுவாக பிள்ளைக ளும் வளர்ந்து தங்கள் பெற்றோர் தங்களுக்க கற்றுக் கொடுத்ததையே பின்பற்றுவார்கள். எனவே, பெற்றோர், உண்மையாக எதை தங்கள் வாழ்வில் மேன்மைப் படுத்துகின்றார்கள் என்றும், பிள்ளைகளின் வளர்ச் சியில் எதை குறித்து உண்மையான மகிழ்சியும் பெருமையடையகி ன்றார்கள் என்பதையும் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். மனுஷன் எதை விதைக்கின்றானோ, அதையே அறுப்பான் என் கின்ற உண்மையை மறந்து போய்விடக் கூடாது. எனவே, உண்மை யயுள்ள இருதயத்தோடு, தேவனாகிய கர்த்தர் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள். அப்போது பிள்ளைகளும் உங்களை பின்பற்றி வருவார்கள்.
ஜெபம்:
என் உள்ளந்தரியங்களை அறிந்த தேவனே, நான் முதலாவதாக உம்முடைய ராஜ்யத்தையும் நீதியையும் உண்மையாக தேடும்படிக்கு உணர்வுள்ள இருயத்தைத் தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 கொரி 11:1