புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 05, 2024)

பெரிய குற்றம் எது?

லூக்கா 12:31

தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக்கொடுக்கப்படும்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனாவனொருவன், வாலிப நாட்களிலிருந்தே புகைப்பிடிக்கும் பழக்கமுடையவனாக இருந்து வந்தான். ஆண் டுகள் கடந்து செல்லும் போது, அந்தப் பழக்கத்திற்கு அவன் அடிமையாகிவிட்டான். அவன் வீட்டிலிருந்தாலும், வேலையிலிருந்தாலும், திரு விழாக்களுக்கு சமுகமளித்தாலும், குறித்த நேரங்களிலே அவன் எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல், வெளியே சென்று புகைத்துக் கொள்வான். பணம் விரயமாவதையும், தன்னோடு ஒரே வீட்டிற் குள் வாழும் மனைவி, பிள்ளை களின் சுகாதாரம், சுகம், சேமநலம் எதையும் குறித்து அவன் உணர முடியாத நிலைக்கு அவன் தன்னையே தான் அடிமையாக்கிக் கொண்டான். பொதுவாக, புகைப்பிடி த்தல், மதுபான வெறி கொள்ளுதல், போதைவஸ்து அடிமைத்தனங்கள் மனிதனுடைய வாழ்க்கையை பாழாக்கிப்போடும் என்பதைக் குறித்து மனிதர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால், ஒருவன், தன் கல்வி, வேலை, விளையாட்டு, பொழுபோக்கு போன்றவற்றிற்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டு, தன் குடும்பத்தின் தேவைகளை உணர முடியா மல் போகும் போது அவனும் தன்னை அவைகளுக்கு அடிமையாக்கிக் கொள்கின்றான். எனவே, இந்த உலகத்திலே மனிதர்களுக்கு நன்மை யாக தோன்றும் காரியங்களும் குடும்பத்தின் நிம்மதியை குலைத்து, வாழ்வின் முக்கிய இலக்கை அடையமுடியாதபடிக்கு தடையாக மாறிவிடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்நாட்களிலே, விசுவாச மார்க்கத்தாரும், பிள்ளைகள் படிக்க வேண்டும், கைநிறைய உழைக்க வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு வேண்டிய யாவற்றையும் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கின்றார்கள். சில வேளைக ளிலே, தேவனை தேடுவதைவிட, கல்வி, வேலை, பொழுது போக்குகளை பிள்ளைகளின் வாழ்க்கையிலே முதன்மைப்படுத்துகின்றார்கள். எப்படி? ஞாயிறு ஆராதனையை தவறவிட்டாலும், கணித பாடத்தின் வகுப்புகளை தவறவிடக்கூடாது. அனுதினதும் வேதத்தை வாசித்து, ஜெபம் செய்யாவிட்டாலும், பாடசாலையிலே கொடுக்கும் வீட்டுப் வேலைகளை செய்து முடிக்க வேண்டும். வேதத்தை அறியாவிட்டாலும், படிக்கும் பாடங்களிலே அதிக புள்ளிகளை எடுக்க வேண்டும் என்ற மனநிலையுடையவர்களாக மாறிவிடுகின்றார்கள். தேவனுடைய ராஜ்யத் தையே முதன்மைப் படுத்திக் கொள்ளுங்கள். அப்பொழுது தேவ ராஜ் யத்தின் சமாதானம் உங்கள் குடும்பத்தில் நிலைத்திருக்கும்.

ஜெபம்:

அன்பின் பரம தகப்பனே, இந்த உலகத்தின் நன்மைகளிலே அகப்பட்டு நான் மாயைக்குள் சிக்கிவிடாதபடிக்கு, பரலோக மேன்மையையே நான் நாடித் தேடும்படிக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 5:9