புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 04, 2024)

வாழ்வின் மேன்மையான நோக்கம்

வெளிப்படுத்தல் 19:9

ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான்.


தேசத்தை ஆளும் ராஜாவானவர், உங்களை ராஜ்யத்தின் அதி விசே ஷpத்த விருந்தொன்றுக்கு அழைத்தால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்? ஆண்டவராகிய இயேசு இதைக் குறித்து கூறியதை இன்று தியானம் செய்வோம். 'ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்ப ண்ணி, அநேகரை அழைப்பித்தான். விருந்து வேளையில் தன் ஊழி யக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான்.அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார் கள். ஒருவன்: ஒரு வயலைக்கொ ண்டேன், நான் அகத்தியமாய்ப் போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண் டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப்பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும் படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான்; அப்பொழுது வீட்டெஜமான் கோபமடை ந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணி களையும் குருடரையும் என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா என்றான். அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான்' என்று சொன்னார். நித்திய ராஜ்யத்திற்கென்று அழைப்ப்பட்டவர்களே, ஆண்டவராகிய இயேசு குறிப்பிட்ட மூன்று விருந்தாளிகள் இந்த உலகிலே வாழ்க்கை;கு வேண்டிய காரியங்களைக் சுட்டிக் காட்டியே போக்குச் சொல்ல ஆரம் பித்தார்கள். பரலோகத்தின் பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டி ருக்கும் உங்களுடைய மனநிலையைக் குறித்து நீங்களே ஆராய்ந்து அறிய முடி யும். தேவனுடைய அழைப்பை உங்கள் வாழ்விலே கனம் பண்ணுங்கள். உலக தேவைகளுக்காக தேவ காரியங்களை மாற்றியமைக்க முயற்சி செய்யாமல், உலக காரியங்களை தேவ சித்தப்படி நிறைவேற்றுங்கள். வாழ்வின் மேன்மையான இலக்கை இழந்து போய்விடாதிருங்கள். தேவ ஆட்டுக்குட்டியாவரின் விருந்து அழைக்கப்பட்டவர்கள் பாக்கிவான்கள்.

ஜெபம்:

மேலானவைகளை நாடும்படிக்கு என்னை அழைத்த தேவனே, இந்த உலக தில் அவசியமானவைகள் என்று தோன்றும் காரியங்களால் என் இருதயம் உணர்வற்றுப் போய்விடாதபடிக்கு என்னை காத்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 22:1-14