புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 03, 2024)

வாழ்விலே முக்கியமானவைகள்

2 பேதுரு 2:19

எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாலிபனொருவன், தற்போதிருக்கும் வாடகை வீட்டிலிருந்து வேறொரு வாடகை வீட்டிற்கு இடம்பெயர வேண்டியிருந்ததால், உதவிக்காக தன் நண்பர்கள் சிலரை, முன்குறித்த நாளொன்றிலே வரும்;படியாக அழைத்திருந்தான். முதலாவது நண்பன் அவனை நோக்கி: நண்பா, அந்த நாளிலே, எனக்கு வகுப்பு உண்டு அதனால், உதவிசெய்ய மு டியாது என்றான். இரண்டாவது நண்பன்: நான்; உதைபந்தாட்டப் போட்டியை பார்க்கும்படி அனுமதிசீட்டை வாங்கி விட்டேன், அதனால் என க்கு வரமுடியாததையிட்டு மனம் வருந்துகின்றேன் என்றான். மூன் றாவது நண்பன்: நான் திரைப் படம் பார்க்க செல்கின்றேன் எனவே வர முடியாது என்றான். நண்பர்க ளில் வேறு இருவர்: குடித்து வெறித்திருந்ததால் அந்நாளிலே அங்கு செல்லாதிருந்தார்கள். அந்த வாலிபனானவன் இடம்பெயர்ந்த அடுத்த நாளிலே, அவனுக்கு உதவி செய்ய போகாத நண்பர்கள், தங்கள் தங்கள் காரணங்களே தகுந்ததும் ஏற்புடையது என்று தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டார்கள். ஒருவேளை சிலருடைய காரணங்கள் தகுந்ததாவும், வேறு சிலருடைய காரணங்கள் தகுந்ததல்லாததுமாக இருக்கலாம். காரணங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நண்பனுக்கு உதவி செய்ய செல்வதே இலக்காக இருந்தால், அவர்கள் யாவரும் தகுந்த காரணத்திற்காகவோ, தகுந்தல்லாத காரணத்திற்காகவோ இல க்கை அடையத் தவறி விட்டார்கள். இன்று பற்பல காரணங்களுக்காக மனிதர்கள் சபை கூடிவருதலை தவிர்த்துக் கொள்கின்றார்கள். இவர்க ளுடன் சில விசுவாச மார்க்கத்தாரும் இணைந்து கொண்டு, பலவிதமான காரணங்களையும், சாட்டுப் போக்குகளையும் சொல்லிக் தங்கள் கிரியைகளை நியாயப்படுத்திக் கொள்கின்றார்கள். ஒரு விசுவாசியா னவன், தன் வாழ்விலே எதை முக்கியப்படுத்திக் கொள்கின்றானோ, அதுவே அவனுடைய இலக்காக மாறிவிடுகின்றது. அதனால் நாளா டைவிலே அவர்கள் தங்கள் வாழ்விலே முக்கியம் என்று நியமித்த காரி யமானது, உலக பார்வைக்கு நன்மையானதாக தோன்றினாலும், அவர் கள் வாழ்க் கையை அது ஆளுகை செய்ய ஆரம்பித்து விடுகின்றது. பிரியமான வர்களே, உங்கள் வாழ்வின் முக்கியத்துவமானது என்ன? யார் அல்லது எது உங்கள் இருதயங்களை ஆளுகை செய்கின்றது? தேவனுக்கு முன்ன எதை சாட்டுப் போக்காக கூறிக் கொள்வீர்கள்?

ஜெபம்:

மேலானவைகளை தேடும்படி என்னை வேறு பிரித்த தேவனே, நான் முதலாவது தேவ ராஜ்யத்தையும் அதன் நீதியையும் ஆவலோடு தேடும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33