புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 01, 2024)

நல்மனச்சாட்சியும் விசுவாசமும்

1 தீமோத்தேயு 1:18

நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு.


ஒரு மனிதனானவன் ஆழ் சமுத்திரத்திலே தாபரிக்கும் ஊரை நோக்கி தன் சொந்தக் கப்பலிலே பயணித்துக் கொண்டிருந்தான். சமுத்திரத்தின் இரைச்சல், கார் மேகங்கள் சூழ்ந்து, இடி முழக்கங்கள், பெரும் புயல் காற்றுக்களையும், வலிய தண்ணீரிலே ஏற்படும் பயங்கரங்களையும் எதிர்நோக்கி செல்லும் அந்த மனிதனானவன், தானே தன் கப்பலை சேதப்படுத்திக் கொள்பவனாக இருந் தால், அவனை மதியீனன் என்று மற் றய மனிதர்கள் கூறுவார்கள் அல் லவா? அப்பபடிப்பட்ட மனிதர்கள் தங் கள் துணிகரமான செயல்களால், தங் கள் சுத்தமனசாட்சியை உணர்வற்றுப் போகப் பண்ணுகின்றார்கள். அவர்கள் மனம் இருளடைந்து போவதால், அவ ர்கள் செய்வது இன்தென்று அறியாதவர்களாய் ஆழ் கடலிலே சொந் தக் கப்பலையே உடைத்துப் போடும் மனிதனுக்கு ஒப்பாக இருக் கின்றார்கள். தங்கள் அருமையான வாழ்க்கையை தாங்கே கெடுத்துக் கொள்கின்றார்கள். ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, பரம யாத் திரிகளாக இந்த உலகத்தை கடந்து கொண்டிருக்கும் நம் வாழ்விலே, 'மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகார ங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வான மண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு'. நாம் நல்ல போராட்டத்தை போராடும்படிக்கும், நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கும்படிக்கும், தேவன் நடக்கு கொடுத்த நல்ம னச்சாட்சியை நாம் காத்துக் கொள்ள வேண்டும். வாழ்விலே தவறுகள் ஏற்படுவதுண்டு ஆனால், ஒரு விசுவாசியானவன், திரும்பத் திரும்ப தன் மனச்சாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய துணிகரம் கொள் ளும் போது, அந்த மனசாட்சியானது சூடுண்டு போய்விடுகின்றது. அதன் பின்பு வாழ்க்கையில் தவறும் போது, தவறுகள் தவறாக தெரியாத படிக்கும், பாவங்கள் இனி பாவங்களாக தோன்றாதபடிக்கும், அவர் களது மனசாட்சியானது கடினப்பட்டு போய்விடுகின்றது. சிலர் இந்த நல்மனச்சாட்சியைச் அற்பமாக எண்ணி, அதைத் தள்ளிவிட்டுகின்றதி னாலே, விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை போராட முடியாமல், தங் கள் விசுவாசமாகிய கப்பலைச் தாங்களே சேதப்படுத்திக் கொள்கி ன்றார்கள். எனவே நீங்கள் அப்படியான உணர்வற்ற மதியீனமான நிலைக்கு தள்ளப்பட்டுப் போய்விடாதபடிக்கு, விசுவாசமும் நல்மன ச்சாட்சியும் உடை யாவர்களாயிருங்கள்.

ஜெபம்:

சுத்தமனச்சாட்சியை எனக்கு தந்த தேவனே, நீர் என்னோடு தயவாய் பேசும் போது, விமர்சனங்களுக்கு இடங்கொடாமல், உம்முடைய ஆலோசனைகளை கேட்டு அதன்படி வாழ என்னை வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:12