தியானம் (ஆவணி 31, 2024)
இரண்டு எஜமான்கள்
மத்தேயு 6:24
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது;
'இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். ஒரு ஊரிலே நீதி நியாயத்துடன் பணிவாக வேலை செய்யும் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அந்த ஊரிலே, இரண்டு பண்ணை முதலாளிகள் இருந்தார் கள். இருவரும் அவனை தங்கள் பண்ணையிலே வேலை செய்யும்படி அழைத்தார்கள். அவர்களிலே உண்மையுள்ள முதலாளியான வன், தன் பண்ணையில் வேலை செய்யும், வேலைக்காரனுக்கு வரும் நன்மைகளையும், மறுபக் கத்திலே, பண்ணையிலே அவன் எதிர்நோக்கும் பிரச்சனைகள் இன்ன என்பதையும் முன்கூட்டியே தெளிவாக கூறினார். மற்ற முதலா ளியானவனோ, தனக்கு இலாபம் உண்டாகும்படியும், தன் நோக்கம் நிறை வேறும்படியும், வேலைக்காரனை நோக்கி: நீ என் பண்ணையிலே வேலை பார்த்தால், நீ சீக்கிரமாக பெரியவனாகிவிடுவாய். குறுகிய காலத்திலே அதிகம் உழைக்கலாம். அதிகமாய் கஷ;டப்படத் தேவையில்லை என்று அவனுக்கு பாதி உண்மையைக் கூறினான். இவர்களில் ஒரு முதலாளிக்கே அந்த வேலைக்காரன் வேலை பார்க்க முடியும். அவர்களில் ஒரு வனுக்கே அவன் விசுவாசமு ள்ளனாக இருக்க முடியும். ஏனெனில், அவை இரண்டு பண்ணைகள், அவற்றின் சொந்தக்காரர் இருவர்கள். அந்தப் பிரகாரமாகவே, தேவனானவரும், உலக பொருளும் நமக்கு முன்பாக இருக்கின்றது. வாழ்வ டையும்படி தேவனானவர் யாவரையும் அழைக்கின்றார். அதே வேளையிலே, வாழ்வை அழிக்கும்படிக்கு உலகப் பொருளுக்கு எஜமானனாக இருக்கும் எதிராளியாவனும் அழை க்கின்றான். ஒரு விசுவாசியாவன், தேவனானவருக்கும் உலக பொரு ளுக்கும் விசுவாசியாக இருக்க முடியாது. நாம் உலகத்தில் வாழும் வரை சில உலகப் பொருட்கள் நமக்குத் தேவை. ஆனால், நம்முடைய ஆசை எதைப்பற்றியிருக்கி ன்றது என்பதை குறித்து நாம் எச்சரிக்கை யுள்ளவர்களாக இருக்க வேண்டும். இன்று விசுவாச மார்க்கத்தார் ஐசுவரியத்தின் பெருக்கம் யாவற்றையும் தேவ ஆசீர்வாதம் என்று அவற்றை சார்ந்து கொள் வதால், இதைக் குறித்த உபதேசம் பலருக்கு இன்று கடினமாக இரு க்கின்றது. உங்கள் ஆசை எஜமானனாகிய இயேசுவையே பற்றி இருக்கட்டும். உங்கள் பொக்கிஷத்தை பரலோகத்திலே சேர்த்து வைத்திருங்கள்.
ஜெபம்:
என் தேவனாகிய கர்த்தாவே, அழிந்து போகும் உலக செல்வத்தின்மேல் என் கண்களை பதிய வைக்காமல், இந்த உலகிலே போதுமென்கின்ற மனதோடு வாழ எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 தீமோ 6:10