புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 30, 2024)

இருமனம் வேண்டாம்

யாக்கோபு 1:8

இருமனமுள்ளவன் தன் வழி களிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்.


நீங்கள் ஒன்றுக்கும் கவலையடையாமல் உங்கள் குறைகளை கர்த்தரிடத்தில் தெரியப்படுத்துங்கள் என்று பல ஆலோசனைகளையும், வாக்குத்ததத்தங்களையும் நாம் வேதத்திலே காண்கின்றோம். ஆனா லும், விண்ணப்பம் செய்கின்றவன், எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு விண்ணப்பம் செய்ய வேண்டும். சந்தேகப் படுகின்ற மனமானது, காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கின்றது. எந்தக் காரியத் திலும் சந்தேகப் படுகின்றவன், தான் ஆரம்பத்தில் கொண்டிருந்த விசுவாசத்தைவிட்டு விலகி, விசுவாசத்திற்குரிய கிரியைகளை நடப் பிக்காமல், சந்தேகத்தினால் உண்டான மாற்று வழிகளை பின்பற்றுகின்றான். அப்படியானால், நாம் விசு வாசித்த பின்பு ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பது சரியாகுமா? தேவனை விசுவாசிக்கின்றவன், தேவன் சொன்ன வார்த்தைகளின்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்கின்றான். ஒரு சமயம், சில குருடர்கள், தாங்கள் பார்வையடையும்படி ஆண்டவர் இயேசுவினிடத்தில் வந் தார்கள். அவர் அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கின்றீர்களா என்று கேட்டார். அதற்கு, அவர்கள் ஆம் என்றார்கள். இயேசு அவர்கள் கண்களை தொட்டு குணமாக்கினார். வேறொரு சமயத்திலே, ஆண்டவர் இயேசு, தன்னை தேடி அதிக தூரம் வந்த நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ வீட்டிற்கு போ, உன் வேலைக்காரன் சுகமாவான் என்று கூறி அவனை அனுப்பி விட்டார். அவனும் இயேசு சொன்னதை செய்தான். அவனுடைய வேலைக்காரன் சுகமானான். இன்று நீங்கள் சும்மா இருப்பீர்கள் கர்த்தர் உங்களுக்காக யுத்தத் ததை நடப்பிப்பார் என்று கூறப்பட்டிருக்கின்றது. நாகமானின் குஷ;ட ரோகம் நீங்க அவன் யோர்தானில் ஏழுதரம் முழுக வேண்டியதாயிற்று. கிதியோன் முந்நூறு மனிதர்களோடு, கர்த்தர் கற்பித்த பிரகாரமாக, பெரிய இராணுவத்தோடு எதிர்த்து யுத்தம் செய்ய புறப்பட்டான். இப்ப டியாக, இவர்கள் யாவரும் தேவனை விசுவாசித்தார்கள். அதன் பின்னர், சந்தேகப்படாமல், தேவனுடைய வார்த்தைக்கு தேவ தாசர்கள் கற் பித்தபடி கீழ்படிந்தார்கள். அவைகளே விசுவாசத்தின் கிரியைகள். சில சமயங்களிலே விசுவாசத்தின் கிரியையானது நீடியபொறுமையினால் உறுதி செய்யப்படும். எனவே நீங்களும் மனத்தாழ்மையோடு பொறு மையையும் தரித்துக் கொண்டிருங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் நம்பப்பண்ணின உம் வாக்குத்ததங்களை நான் எப்போதும் வாயினால் அறிக்கை செய்து, அவைகளை என் வாழ்வில் உறுதியாய் பற்றிக் கொண்டிருக்க நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 46:10