தியானம் (ஆவணி 29, 2024)
சந்தேகத்தின் விதைகள்
1 கொரிந்தியர் 16:13
விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புரு ஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
சில வேளைகளிலே நாம் பயந்து கலங்கும் போது நம்முடைய விசுவாசமானது சோதனைக்குட்படுத்தப்படுகின்றது என்பதைக் குறித்து கடந்த நாளிலே தியானம் செய்தோம். அதனால் தான், நான் பயப்படும் நாளினிலே உம்மை நம்புவேன் என்று தேவ பக்தன் பாடியிருப்பதை பரிசுத்த வேதாகமத்திலே காண்கின்றோம். ஒரு வேலைக்காரன் தன் எஜமானனானவனுக்கு உண்மை யும் உத்தமுமாய் நடந்து வந்தான். எஜமானனனுடைய வார்த்தைகள் யாவும் வேலைக்காரனுடைய மன திலே கனம்பொருந்தியதாய் இரு ந்து வந்தது. எஜமானனானவனும் அதை நன்கு அறிந்திருந்தான். தன் வேலைக்காரனின் விவகாரங்க ளிலே நீதியுடனும் நியாத்துடனும் நடந்து வந்தான். ஒருநாள், வேலை க்காரனின் குடும்;பத்திலே ஒரு முக்கிய தேவை ஏற்பட்டிருந்தது. வழ மைபோல, அவன் போய் தன் நிலைமையைக் குறித்து தன் எஜமா னனுக்கு தெரியப் படுத்தினான். எஜமானனானவன் வேலைக்காரனை நோக்கி: நீ உன் போய் உன் வேலைகளை செய். உன் குடும்பத்தி லுள்ள தேவைகளை நான் பார்த்துக் கொள்வேன் என்று கூறினார். அவன் அப்புறமாய் போய், தன் வேலைகளை செய்ய ஆரம்பித்த போது, சக வேலைக்காரரில் ஒருவன், நீ இப்படி மூடத்தனமாக உன் எஜமானனை நம்புகின்றாயா? உன் குடும்பம் இருக்கும் நிலை நல்லதல்ல, அதை பராமுகமாக விட்டு விடாதே என்று கூறினான். அந்த வார்த்தைகளை உள்வாங்கிய அந்த வேலைக்காரனின் மனதிலே எஜமா னானனுடைய வார்த்தைகளைக் குறித்து சந்தேகம் எழ ஆரம்பித்தது. அவன் தன் எஜமானனில் வைத்திருந்த விசுவாசம் தளர ஆரம்பித்தது. ஆம் பிரியமான சகோதர சகோதரிகளே, இவ்வண்ணமாகவே, நம்மு டைய மனதிலும் தேவனுடைய வார்த்தைகளை குறித்த சந்தேகங்கள் விதைக்கப்படும் போது, நம்முடைய ஆண்டவர் இயேசுவின் மேலுள்ள நம்முடைய விசுவாசமும் தளர்ந்து போய்விடுகின்றது. ஆதியிலே, ஏவாளானவள் தேவனுடைய கட்டளைக் குறித்து பிசாசாவனுடன் உரை யாட தன் வாழ்விலே இடம் கொடுத்த போது, பிசாசானவன் அவள் மனதிலே சந்தேகங்களை விதைத்தான். அதனால் அவள் வஞ்சிக்க ப்பட்டு போனாள். எனவே, எஜமானானாகிய இயேசுவின் வார்த்தை களை குறித்த விமர்சனங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் இடமளி க்காமல் விசுவாசத்திலே நிலைத்திருங்கள்.
ஜெபம்:
நிலையான ராஜ்யத்திற்கு என்னை அழைத்த தேவனே, உம்முடைய வார்த்தைக்கு விரோதமான சம்பாஷனைகளுக்கு என் வாழ்வில் நான் இடங்கொடுக்காமல் உறுதியாய் நிலைநிற்க என்னை பெலப்படுத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 62:8