தியானம் (ஆவணி 28, 2024)
ஆபத்தைக் கண்டு கலங்காதிருங்கள்
யோவான் 14:1
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.
ஒரு தகப்பனானவர் தன் சின்ன மகனானவனுக்கு சைக்கிளை ஓட்டுவதற்கு பழக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சில நாட்களுக்கு பின்பு, அவன் சைக்கிளை தெருவோரமாக ஓட்டிக் கொண்டு செல்லும் போது, அவனுடைய தகப்பனானவர் அவனை நோக்கி: நான் என் கையை உன் சைக்கிளிலிருந்து விட்டு எடுத்து, உன் பின்னே வருவேன், நீ நேராகப் பார்த்து சைக்கிளை ஓட்டிச் செல் என்று கூறினார். சில நாட்களுக்கு பின்பு, அவர் அவ்வ ண்ணமாகவே அவனை பயிற்சிவிக் கும் போது, அவன் தன் தலையைத் திருப்பி, வீதியின் அப்புறமாக வரும் சில மனிதர்களையும், வாக னங்களையும் திரும்பிப் பார்த்து கலங்கி, தன் கைகளை சைக்கிளை பிடியை விட்டு எடுத்து, சத்தம் போட ஆரம்பித்தான். அத னால் நிலை தவறிப்போனான். அவன் சைக்கிளோடு கீழே விழுவதற்கு முன் அவன் தகப்பனானவர் அவனை தாங்கிக் கொண்டார். பின்னர் அவனை நோக்கி: ஏன் உன் தலையை திருப்பி மறுபக்கமாக பார்த் தாய்? நான் உனக்கு பின்பாக வருவதை ஏன் மறந்து போனாய் என்று கேட்டார். ஆம், பிரியமானவர்களே, ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்தும் அவருடைய சீஷர்களும், படவில் ஏறி மறு கரைக்கு சென்று கொண்டிருந்தார்கள். படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கட லில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். அப் பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டா யிற்று. இந்த உலகிலே நாம் வாழும்வரை, நம்முடைய வாழ்க்கையி லும் பெரும் புயல் போன்ற அனுபவங்கள் உண்டாகலாம். ஒரு வேளை அவை உங்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கலாம். அந்த வேளை களிலே, நாம் சூழ்நிலைகளை நோக்கி பார்த்து, நம்மு டைய பெலத் திற்கு மிஞ்சினது என்று பதறிக் கலக்கமடையாமல், கர்த்தர்மேல் கொண் டுள்ள விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க வேண்டும். அழைத் தவர் ஒருபோதும் நம்மைக் கைவிடமாடார். உலகத்தின் முடிவு பரிய ந்;தமும் அவர் உங்களோடு இருப்பேன் என்று வாக்கு பண்ணியிருக்கி ன்றார். அந்த உறுதி எப்போதும் நம் இருதயத்தில் இருக்க வேண்டும். அதை நம் வாயினால் நாம் அறிக்கையிட வேண்டும்.
ஜெபம்:
ஒரு போதும் என்னை விட்டு விலகாத தேவனே, நான் எந்த சூழ்நிலையிலும் மனம் பதறி, பயம் என்னை ஆட்கொள்ளவிடாதபடிக்கு உம் வாக்குத்தத்தங்களில் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - மத்தேயு 8:23-27