புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 27, 2024)

விசுவாசம்

1 யோவான் 5:5

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?


விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம், ஏனென்றால், தேவனிடத்தில் சேருகின்றவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகின்றவர்களுக்கு பலன் அளிக்கின்றவரென்றும் விசு வாசிக்க வேண்டும் என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். விசுவாசமில்லாமல் ஒருவனும் தேவனை அறிய வேண்டிய பிரகாரமாக அறிய முடியாது என்பதையும், ஒரு வன் வேதத்தை கற்றுக் கொள்வத ற்கு, அதை ஈவாக நமக்கு கொடுத்த வரைக் குறித்த அசையாத விசுவா சம் அவனிடம் இல்லாவிடின், அவ னுடைய அறிவினால் உண்டாகும் பலன் அற்பமானதாகவே இருக்கும் என்று கடந்த நாட்களிலே தியானம் செய்தோம். நாம் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டோம். அது நம்முடைய கிரியைகளினாலல்ல கிருபையினாலே உண்டாயிற்று. எனவே, நாம் நம்முடைய அழைப்பைக் காத்துக் கொள்வதற்கு வாழ் வின் எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்திலே நிலைத்திருக்கிருக்கி ன்றவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவுக்குள்; வெற்றி வாழ்க்கை வாழ்வதற்கு விசுவாசம் இன்றியமையாததாக இருக்கின்றது. எனினும், ஆண்டவராகிய இயேசு தாம் திரும்பி வரும்போது விசுவாசத்தை காண் பேனோ என்று கூறியிருக்கின்றார். நாம் இரட்சிக்கப்பட்டிருக்கி ன்றோம் என்று கூறி, உணர்வற்றவர்களாக வாழ்ந்துவிட முடியாது. ஆண்டவர் இயேசுவின் மேலுள்ள நம்முடைய விசுவாசம் அற்றுப்போக வேண்டும் என்பதை அவர் விரும்பவில்லை, மாறாக நாம் அவர்மேல் கொண் டுள்ள விசுவாசமானது, இந்த உலகத்தினால் உண்டாகும் வஞ்சகத் தினால் தணிந்து போகாதபடிக்கு எச்சரிப்பை வழங்கியிருக்கின்றார். பரபரப்போடும், வாஞ்சையோடும் ஆரம்பிக்கும் வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கையானது, நாட்கள் கடந்து செல்லும் போது, பல கோணங்க ளுக்கு திரும்பி விடுகின்றது. இதனால், ஆதியிலே விசுவாசத்திலே உறுதியாய் நின்றவர்களுடைய வாழ்க்கையிலே பல கேள்விகளும் சந்தேகங்களும், பயங்களும் எழுந்து விடுகின்றது. விசுவாசத்திலே ஆர ம்பித்த அவர்களுடைய வாழ்க்கையானது மறுபடியும் கிரியைகளுக்கும் மேன்மை பாரட்டுதலுக்கும் திரும்பி விடுகின்றது. பிரியமா னவர்களே, விசுவாசிகள் என்று அழைக்கப்படுகின்ற நீங்கள், எவ்வித மான புயல்கள் உங்கள் வாழ்க்கைப் படகில் மோதினாலும் விசுவாச த்திலே உறுதியாய் நிலைத்;திருங்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நான் பாரங்களையும், பாவங்களையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தை தொடக்கிறவரும் முடிகின்றவருமாகிய இயேசுவை நோக்கி எப்போதும் முன்னேறிச் செல்ல எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - எபிரெயர் 11:1-6