தியானம் (ஆவணி 26, 2024)
நம்பிக்கையிலே உறுதியாயிருங்கள்
2 பேதுரு 1:9
ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளின துமன்றி,
பாடசாலைக்கு செல்லும் மாணவனானவன், கல்வி திணைக்களத்தினால் அங்கீகாரம் பெற்ற, கணித பாடத்திட்டத்திட்டதைக் கொண்ட புத்தகமொன்றை கொள்வனவு செய்தான். அந்த புத்தகத்தின் ஆக்கியோன் (Author) கொடுத்திருக்கும் ஆரம்பம் அவனுக்கு முற்றாக விளங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. அதனால், அவன் அந்தப் புத்தம் பிழை என்று அற்பமாக எண்ணாடமல், அந்த ஆக்கியோனின் மேலுள்ள நம்பிக்கையினாலே, ஒவ்வொரு அத்தியாயமாக, படிப்படியாக, கற்று வந்தான். முத லாம் வகுப்பிலே அவனுக்கு மிகவும் கடினமாக தோன்றிய கணித சூத்திரங்கள், ஐந்தாம் வகுப்பிலே மிகவும் இலகுவாக இருந்தது. ஏனெனில், அவன் பாடங்களை படிப்படியாக படித்து, பயிற்சிகளை தினமும் செய்து, இனி வரவிருக்கும் மேல் வகுப்புகளை குறித்து சிந்தித்து குழப்பமமையாமல், ஆக்கியோனின் வழிகாட்டுதலின்படி, தற்போது கற்க வேண்டியவைகளை கிரத்தையோடு கற்று வந்தான். பிரியமான தேவனுடைய பிள்ளைகளே, 'வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவி யினால் அருளப்பட்டிருக்கிறது' நம்மை அழைத்த தேவனாகிய கர்த்தரே அதன் ஆக்கியோனாக இருக்கின்றார். அவர் கொடுத்த வேதத்தின் ஆழ த்தை குறித்து குழப்பமடையாமல், முதலாவதாக அவர் நம்மை வாக்களித்த தேசமாகிய பரம தேசத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பார் என்ற விசுவாசம் நம்மில் மிக உறுதியாய் இருக்க வேண்டும். நாம் நித்திய ஜீவன் அடைவதற்கு வேண்டிய யாவற்றையும் அவர் கொடுத்த வேதம் கூறுகின்றது. அவற்றுள் சில நம்முடைய தேவையின் படி சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 'ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற் றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.' என்று தொளாயிரத்து முப்பது வருஷம் வாழ் ந்த ஆதாமின் நாட்களை குறித்து சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. அவன் வாழ்ந்த வருடங்களின் விளக்கம் நமக்கு அவசியம் என்றால், தேவ ஆவியானவர் அதை நமக்கு தெளிவாக கூறியிருப்பார். எனவே வேதப் புத்தகத்தின் ஆக்கியோனை நம்புங்கள். அவர் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டார். அவரே நமக்கு ஞானத்தை அருளுகின்றவர்.
ஜெபம்:
என்னை உருவாக்கி, எனக்கு உம்முடைய ஜீவ வார்த்தைகளை எழுதித்த தந்தவரே, நான் பொறுமையோடு உம்முடைய பாதத்திலிருந்து வேத வார்தைகளை கற்றுக் கொள்ள கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 11:6